TN தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

0
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

TN தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – வெளியீடு !

2022ம் கல்வி ஆண்டிற்கான 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 20) வெளியாக உள்ளது. அதன் படி காலை 10 மணி அளவில் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளிட்டார். 10 வகுப்பு பொதுத்தேர்வில் 8.21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனனர். மேலும் தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TN 10th Result 2022 :

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, செப்டம்பர் மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்படி, தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 30-ம் தேதி முடிவடைந்தது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்த நிலையில், தேர்வு முடிவுகளை பள்ளி கல்வி துறை ஜூன் 20 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டது.

அதன் படி, இன்று காலை +2 தேர்வு முடிவுகளை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அத்துடன் 10 வகுப்பு பொதுத்தேர்வில் 90.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். மேலும் இதற்கான இணைய முகவரி நண்பகல் 12 மணிக்கு மேல் வெளியாகும் எனவும் தெரிவித்தார்.

http://www.tnresults.nic.in/http://www.dge1.tn.nic.in/http://www.dge2.tn.nic.in/https://www.dge.tn.gov.in/ஆகிய இணைய தளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

அது மட்டும் அல்லாமல், பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download TN 10th Result 2022 – Released

Download TN 12th Result 2022 – Released

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!