சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரண தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. வாரத்தின் தொடக்கத்திலேயே தங்கத்தின் விலை ஏற்றம் கொண்டுள்ளதால் நகைப்பிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தங்கம் விலை:
கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொரோனா பரவல் குறைந்து நாடு இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியதும் தங்கம் விலை குறையும் அப்போது நகை வாங்கி கொள்ளலாம் என்று நகைப்பிரியர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் அடுத்தடுத்து கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தது. இதனால் தங்கத்தின் விலை எதிர்பார்த்த அளவு குறையவில்லை. தினந்தோறும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வந்தது.
TN Job “FB
Group” Join Now
அதனை தொடர்ந்து ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரின் தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியாலும் தங்கம் விலை உயர்ந்தது. தங்கம் விலை 40,000 ஐ எட்டியது. இதனால் நகைப்பிரியர்கள் தங்க நகைகளை வாங்க முடியாமல் சிரமப்பட்டனர். இந்த மாதம் முதல் தேதியில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் 37,920 ரூபாய்க்கு விற்பனையானது. அதன் பிறகு மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. நேற்றைய (19.06.2022) நிலவரப்படி சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து சவரன் ரூ.37,720-க்கு விற்பனையானது.
இந்த நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ.38,200-க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.4,755-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.66.30-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.66,300-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை, பணவீக்கம், பங்கு சந்தை சரிவு போன்ற காரணங்களால் மேலும் தங்கம் விலை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.