கோபி போனில் ராதிகா நம்பரை பார்த்து குழப்பமடையும் பாக்கியா, போலீஸ் ஸ்டேஷனில் அசிங்கப்படுத்திய ராஜேஷ் – இன்றைய எபிசோட்!

0
கோபி போனில் ராதிகா நம்பரை பார்த்து குழப்பமடையும் பாக்கியா, போலீஸ் ஸ்டேஷனில் அசிங்கப்படுத்திய ராஜேஷ் - இன்றைய எபிசோட்!
கோபி போனில் ராதிகா நம்பரை பார்த்து குழப்பமடையும் பாக்கியா, போலீஸ் ஸ்டேஷனில் அசிங்கப்படுத்திய ராஜேஷ் - இன்றைய எபிசோட்!
கோபி போனில் ராதிகா நம்பரை பார்த்து குழப்பமடையும் பாக்கியா, போலீஸ் ஸ்டேஷனில் அசிங்கப்படுத்திய ராஜேஷ் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகாவை ராஜேஷ் போலீசில் கம்ளைண்ட் செய்ய அதனால் ராதிகாவின் அண்ணனிடம் ராதிகாவின் அம்மா போன் செய்து விவரத்தை சொல்கிறார். பின் ஆதாரத்துடன் ராஜேஷ் ராதிகாவை அவமானப்படுத்துகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் ராதிகாவின் மீது ராஜேஷ் போலீசிடம் புகார் தெரிவிக்க அதனால் ராதிகாவின் அம்மா இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என ராதிகாவின் அண்ணனிற்கு போன் செய்கிறார். ராஜேஷ் மீண்டும் தொந்தரவு செய்வதாக சொல்ல இன்னும் அவன் தொந்தரவு இருக்கிறதா என ராதிகாவின் அண்ணன் கேட்கிறார். ராதிகாவை கோபி என்பவர் திருமணம் செய்ய இருப்பதாக சொன்னீர்கள் அவர் மிகவும் நல்லவர் என சொன்னீங்க அது என்ன ஆனது என கேட்க நேரில் வா விவரத்தை சொல்கிறேன் என ராதிகாவின் அம்மா சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் கோபி போன் பேசிக் கொண்டிருக்க அப்போது இனியா சத்தமாக டிவி பார்த்துக் கொண்டிருக்கிறார். கோபி போன் பேசுவதை பார்த்துவிட்டு இனியா சத்தத்தை குறைக்கிறார். பின் கோபி போனை அங்கையே சார்ஜ் மாட்டிவிட்டு மாடிக்கு சென்றுவிடுகிறார். அப்போது கோபிக்கு ராதிகா போன் செய்ய பாக்கியா போனை எடுக்கிறார். பின் நம்பரை பார்த்துவிட்டு இது யார் நம்பர் என குழப்பத்தில் இருக்க அப்போது கோபி வந்து போனை வாங்கி விடுகிறார். பின் பாக்கியா இந்த நம்பரை எங்கேயோ பார்த்தது போல இருப்பதாக நினைக்கிறார்,

கோபி ராதிகா போன் செய்த சந்தோஷத்தில் போனை எடுக்க அப்போது ராதிகா உங்களால் தான் எனக்கு இவ்வளவு பிரச்சனை இப்போது ராஜேஷ் என் மீது போலீசில் புகார் கொடுத்து இருக்கிறார். இப்படி என்னை போலீஸ் ஸ்டேஷனிற்கு அலைய விட்டு இருக்கீங்க என சொல்ல கோபி நான் வரவா என கேட்கிறார். ஆனால் ராதிகா அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார். பின் பாக்கியா அந்த நம்பரை எங்கேயோ பார்த்தது போல இருப்பதாக சொல்லி யோசித்துக் கொண்டே இருக்கிறார். 9 நம்பர் சரியாக அடித்துவிட கடைசி நம்பர் ஞாபகம் வரவில்லை அதனால் பாக்கியா அப்படியே விடுகிறார்

TN தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2022 – சற்று நேரத்தில் வெளியீடு !

பின் ராதிகாவின் அண்ணன் வீட்டிற்கு வர நடந்ததை எல்லாம் ராதிகாவின் அம்மா சொல்கிறார். அந்த கோபி நல்லவர் ராதிகாவை கல்யாணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறார். ஆனால் அவரையும் வேண்டாம் என இவள் சொல்கிறார். அதனால் தான் இவ்வளவு பிரச்சனை என சொல்கிறார். பின் ராதிகாவின் அண்ணன் ராதிகாவை ஏன் இப்படி எல்லாம் செய்தாய் என கேட்கிறார். பின் அனைவரும் கிளம்பி போலீஸ் ஸ்டேஷன் செல்கின்றனர். அங்கே ராஜேஷ் ராதிகா மீது பயங்கர குற்றசாட்டை வைக்கிறார்.

ராதிகாவின் அண்ணன் அதெல்லாம் இல்லை என சொல்ல ஆனால் ராஜேஷ் கோபி என்ற ஒருத்தன் அடிக்கடி வீட்டிற்கு வருகிறார். அதனால் என் மகளுக்கு பாதுகாப்பு இல்லை என ராஜேஷ் சொல்ல அப்படி எல்லாம் ஒன்றுமில்லை என ராதிகாவின் அண்ணன் சொல்கிறார். உடனே ராஜேஷ் கோபியுடன் ராதிகா சண்டை போடும் வீடியோ ஒன்றை காட்டுகிறார். அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைய நாங்க கோபியை கண்டிப்பாக திருமணம் செய்து வைக்க இருக்கிறோம் என ராதிகாவின் அம்மாவும் அண்ணனும் சொல்கிறார். பின் கோபிக்கு போன் செய்து போலீசார் விசாரணைக்கு வர சொல்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here