TNPSC பொது தமிழ் – தமிழ் மகளிர் சிறப்பு

1

தமிழ் மகளிர் சிறப்பு

இங்கு கொடுக்கப்பட்டுள்ள தமிழ் மகளிர் சிறப்பு முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும்.  இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

அன்னி பெசண்ட் அம்மையார்:

  • அன்னி பெசண்ட் காலம் : 01.10.1847 – 20.09.1933
  • லண்டனில் வாழ்ந்த ஐரி குடும்பத்தில் பிறந்தவர்.
  • இவரது பெற்றோர் வில்லியம் பைஜ்வூட் ஹரோ.
  • பெற்றோர் இட்ட பெயர் அன்னி உட், திருமணத்திற்குப் பின் திருமதி அன்னி பெசண்டு என்று அழைக்கப்பட்டார்.
  • 1893 ல் பிரமஞான சபைப் பணிக்காக இந்தியா வந்தார்.
  • 09.1875 ல் எச்.பி.பிளாவட்சி என்ற ர~pய அம்மையாரும் எச்.எ.ஆல்காட் என்ற அமெரிக்கரும் சேர்ந்து அமெரிக்காவில் நியூயார்க் நகரில் துவக்கிய அமைப்பே பிரம்மஞான சபை ஆகும்.
  • இவரும் இந்தியா வந்து சபையின் நோக்கத்தை நிறைவேற்றினார்.

பிரம்மஞான சபையின் நோக்கங்கள்: 

  • உலக சகோரத்துவத்தை மையமாகக் கொண்டு செயல்படல்.
  • உலக சமயங்கள், தத்துவங்கள், அறிவியல்களை ஒப்பிட்டு ஆய்வது.
  • மனிதரிடையே மறைந்து கிடக்கும் இயற்கை நியதிகளைக் கண்டறிதல்.
  • சென்னை அடையாரில் பிரம்மஞான சபையின் தலைமைப் பீடத்தை அமைத்தனர். ஆல்காட் 1907 ல் இறந்தபின் 1907 ல் அன்னி பெசண்ட் அம்மையார் அதன் தலைவரானார்.
  • 1907 முதல் 1933 வரை பிரம்மஞான சபையின் தலைவராக இருந்தார்.
  • சென்னை அடையாறு இவர்தம் பணிக்கு உரிய இடமாகத் திகழ்ந்தது.
  • தேசிய இயக்கத்திற்கு உறுதுணையாக இருந்தார். நியூ இந்தியா என்ற நாளிதழை நடத்தினார்.
  • “நியூ இந்தியா இதழைப் பின்பற்றியே தமிழ் இதழ்கள் நடத்த நான் தூண்டப்பட்டேன்” என்று கூறியுள்ளார்.
  • காந்தியடிகளுக்கு முன்புவரை இந்திய அரசியலில் பெருஞ்செல்வாக்குப் பெற்றிருந்த தலைவர் அன்னிபெசன்ட் ஆவார்.
  • இவர் ஹோம்ரூல் என்னும் தன்னாட்சி இயக்கம் – ர்ழஅந சுரடந ஆழஎநஅநவெ தொடங்கினார்.
  • திலகருடன் சேர்ந்து பணியாற்றினார்.
  • 1917 ல் கல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்.
  • இந்தியாவையே தாயகமாகக் கொண்டார். இந்தியா ஆன்மீகப் பண்பாடு மேற்கத்திய பண்பாட்டிற்கு எந்தவிதத்திலும் தாழ்ந்ததல்ல என்று எடுத்துரைத்தார்.
  • இந்திய சமய மறுமலர்ச்சியில் அவரது பணி தயானந்தர் மற்றும் விவேகானந்தர் தொண்டுகளோடு ஒப்பு நோக்கத்தக்கது.
  • பகவத்கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
  • சுமார் இருபது ஆண்டுகள் இந்து ஆன்மீக மறுமலர்ச்சிக்குப் பாடுபட்ட அவர் 1914 ல் இந்திய அரசியல் மறுமலர்ச்சி கருதி அரசியலில் ஈடுபட்டார்.
  • “அடக்கு முறை அதிகரிப்பு, உரிமை ஒடுக்கப்படுதல், மாணவர்கள் துன்புறுத்தப்படுதல் புரட்சி அபாயம்” ஆகியவை தாம் தம்மை தீவிர அரசியலில் ஈடுபடச் செய்வதாக அவர் கூறினார்.
  • தன்னாட்சி சங்கத்தைத் தோற்றுவித்தார். சுதேசி இயக்கத்தை ஊக்குவித்து, இந்திய விடுதலைப் போராட்டத்தில் சிறப்பாகப் பங்கேற்றார்.
  • ஆனால் சக்கரியாஸ் என்ற வரலாற்றாசிரியர் “தேசியத் தீவிரவாதிகள் புரட்சியாளர்களுடன் சேர்ந்துவிடாது தடுக்கவும் அவர்களைப் பேரரசில் ஏதாவது ஒரு வகையில் அனுசரித்துப் போகச் செய்யவும் தான் அரசியலில் ஈடுபட்டார்.” என்று கூறியுள்ளதும் கவனிக்கத்தக்கது.
  • இந்து இதயம் கொண்ட ஐரி~; மாது அவர். இந்துவைப்போல் உடையணிந்து இந்துவைப்போல் வாழ்ந்து இந்துக்களின் மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்டார்.
  • கேட்டார்ப் பிணிக்குந்த தகைவாய்க் கேளாரும் வேட்ப மொழியும் சொல்லாற்றால் மிக்கவர் அன்னிபெசன்ட் அம்மையார்.
  • காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித்த முதல் பெண்மணி இவரே ஆவார்.
  • காந்தியடிகள் அரசியல் தலைமையை ஏற்ற பிறகு இவர் சமூகப் பணியில் அதிக கவனம் செலுத்தினார்.
  • சாரணர் இயக்கத்தை இந்தியாவில் பரப்பினார். இவர் காசியில் தொடங்கிய பள்ளிதான் பிற்காலத்தில் காசி இந்து பல்கலைக்கழகமாக மாறிற்று.
  • இரவீந்திரநாத் தாகூரின் ஆதரவுடன் சென்னையில் தேசிய பல்கலைக்கழகம் ஒன்றைச் சில ஆண்டுகள் நடத்தினார்.
  • இந்து சமயத்தின் மீது பெரும் மதிப்பு கொண்டவர், “இந்து சமயம் சிறந்த முறையில்
  • பேணப்படாவிட்டால் இந்தியாவிற்கு எதிர்காலம் கிடையாது” என்று சொன்னவர்.
  • இந்திய மகளிர் சங்கத்தை நிறுவியவர். இளமைத் திருமணத்தை எதிர்த்தார். பெண்கள் மறுமணத்திற்கும் குரல் கொடுத்தார்.
  • வாழ்நாள் முழுவதும் இந்தியாவின் மேம்பாட்டிற்கும் பெண் விடுதலைக்கு பாடுபட்டவர்.
  • “பிரம்மஞான சபை இந்து கலாச்சாரத்தையும், சமுதாயச் சீர்திருத்தத்தின் அவசியத்தையும், அனைத்து துறைகளின் முன்னேற்றத்தையும், வலியுறுத்தியதன் விளைவாக இந்திய தேசியம் துளிர்விட்டு வளர வழி வகுத்தது” என்றார் ஆர். சத்திய நாதையர்.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்:

  • ‘தமிழகத்தின் அன்னிபெசண்ட்’ என்று அறிஞர் அண்ணாவால் புகழப்பட்டவர்.
  • கி.பி.1883, பெற்றோர் கிரு~;ணசாமி – சின்னம்மாள்
  • தேவதாசி குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கு ஆடலும் பாடலும் உரியன ஆனால் தந்தை அவற்றைக் கற்றுத்தர வில்லை.
  • உறவினரின் பகையால் குடும்பம் ஒதுக்கிவைக்கப்பட்டது. ஐந்து வயதானபோது அம்மையாரின் தாயே வறுமை காரணமாகப் பத்து ரூபாய்க்கு இவரை ஒரு தேவதாசியிடம் விட்டுவிட்டார்.
  • இசையும், நாட்டியமும் கற்றுத் தந்த சுயம்பு என்பவரை மணந்தார்.
  • 1917 ல் மயிலாடுதுறையில் தேவதாசி முறைக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தார். இதனை ஏற்காத சிலர் கொடுமைப்படுத்தினர்.
  • காந்தியின் கொள்கையில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்.
  • பேச்சாளர்கள் எதையும் பேசக்கூடாது என்று கட்டளையிட்டபோது தம் கருத்தை கரும்பலகையில் எழுதி மக்கள் முன் வைத்தார்.
  • இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டிற்குப் பிறகு காந்தி கைது செய்யப்பட்ட போது அம்மையார் ஆங்கிலேயர்க்கு எதிர்ப்புக் காட்ட மூவண்ணக் கொடியை ஆடையாக உடுத்திக் கொண்டார்.
  • கதர் ஆடையை ஊர் ஊராகச் சென்று விற்றார். காந்தியத்தை ஏற்போர் குடிசையில் வாழ வேண்டும் என்ற காந்தியின் கட்டளையை ஏற்று ஓட்டு வீட்டை விடுத்து குடில் அமைத்துத் தங்கினார்.
  • 1925 ல் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார்.
  • 1936 ல் வெளியான “தாசிகளின் மோசவலை” எனும் இவரது நூல் தேவதாசிகளின் அவல நிலையை எடுத்துக் கூறியது.
  • குடிலின் முன் “கதர் அணிந்தவர்கள் உள்ளே வரவும்” என்று எழுதி வைத்தார்.
  • மொழிப்போர் பேரணியில் ஒரே பெண்மணி
  • பெரியார், திரு.வி.க, வரதராஜூலு, தருமாம்பாள், நீலாம்பிகை, மலர்முகத்தம்மையார், தாமரைக் கண்ணியார் போன்றோர் அம்மையாரோடு இணைந்து தேவதாசி முறையை ஒழிக்கப்பாடுபட்டனர்.
  • சுயமரியாதை திருமணத்தை ஆதரித்தவர். 1938 ல் நடந்த இந்தி மொழி எதிர்ப்புப் போரில் உறையூர் முதல் சென்னை வரை 42 நாட்கள், 577 மைல் நடைப்பயணம் மேற்கொண்டார்.
  • இப்பயணத்தில் கலந்து கொண்ட ஒரே பெண்மணி. பயணத்தின் போது 87 பொதுக்கூட்டங்களில் பேசினார்.
  • தீண்டாமை, தேவதாசிமுறை, குழந்தைத் திருமணம், கைம்மை நோன்பு போன்ற சமூகக் கேடுகளைத் தீவிரமாக எதிர்த்தார்.
  • 06.1962 ல் இவ்வுலக வாழ்க்கையை நீத்தார்.
  • 1989 இல் இவர் பெயரால் ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தினை தமிழக அரசு வழங்கி வருகிறது.

டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி:

  • பெண்கள் உரிமைக்காக உழைத்துப் புகழ் பெற்றவர்.
  • 07.1886 ல் பிறந்தார்.
  • பெற்றோர் : நாராயணசாமி – சந்திரம்மாள்
  • ஊர் : புதுக்கோட்டை
  • புதுக்கோட்டை சமஸ்த்தானத்தின் கல்வித்துறை இயக்குநர், அரசர் கல்லூரி முதல்வர், அரசரின் ஆலோசகர் போன்ற பதவிகளை வகித்தவர்.
  • ஆறாம் வகுப்போடு இவரின் படிப்பு நின்ற போது ஆசிரியர் பாலையா என்பவரின் முயற்சியால் மீண்டும் பள்ளியில் பயின்றார்.
  • கல்லூரி முன்னிலை தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.
  • புதுக்கோட்டை மன்னரின் தனி ஆணை பெற்றுக் கல்லூரியில் சேர்ந்தார். வகுப்பில் திரை மறைவிலிருந்து பாடம் கேட்டார். தனி அறையில் தங்கிப் படித்தார். பேராசிரியர்கள் புகழத்தக்க வண்ணம் கல்லூரிப் படிப்பை முடித்தார்.
  • மருத்துவராக விரும்பினார். தம் தந்தையின் மாணவரான சீனிவாச ராவின் உதவியுடனும் மன்னரின் உதவிப் பணத்துடனும் 1907 ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.
  • 1912ல் மருத்துவப்பட்டம் பெற்றார்.
  • மருத்துவத்துறையில் பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற சிறப்பையும் அடைந்தார்.
  • 1913 ல் முதல் பெண் மருத்துவமனைப் பணி மருத்துவராகப் பயிற்சி முடித்தார்.
  • எழும்பூரில் தனியாக மருத்துவத் தொழில் செய்தார். விசாகப்பட்டினம் ஜார்ஜ் மன்னர் மருத்துவமனையில் பணியாற்றினார்.
  • 1914ல் டாக்டர்.சுந்தர ரெட்டியைத் திருமணம் செய்து கொண்டார்.
  • இராம்மோகன், கிரு~;ணமூர்த்தி என்ற இரு மகன்கள் பிறந்தனர்.
  • முத்துலட்சுமியின் சகோதரி சுந்தராம்பாள் புற்றுநோயால் இறந்தார். இது புற்றுநோயைப் போக்கும் முயற்சிக்கு முத்துலட்சுமியை இழுத்தது.
  • 1925ல் இந்திய அரசின் உதவியால் குடும்பத்தோடு லண்டன் சென்று “செல்சியா” மருத்துவமனையில் தாய் – சேய் மருத்துவப் பயிற்சி பெற்றார்.
  • புனேயில் அனைத்திந்திய பெண்கள் மாநாடு (1930)
  • தேவதாசி முறையை ஒழிக்கும் சட்டத்துக்கு மூலவர்.
  • லண்டன் “ராயல்” புற்றுநோய் மருத்துவமனையில் புற்றுநோய் ஆய்வு செய்தார்.
  • பிரான்சு நாட்டு தலைநகர் பாரிஸில் நடந்த மகளிர் மாநாட்டில் இந்திய மகளிர் கழகத்தின் சார்பில் கலந்து கொண்டு குழந்தை மணக்கொடுமை, விதவைத் திருமணம், பெண்களின் உரிமைகள் குறித்துச் சிறந்த சொற்பொழிவாற்றினார்.
  • 1926 ல் பெண்களும் தேர்தலில் போட்டியிடலாம் எனச் சட்டம் இயற்றப்பட்டது,
  • தமிழக ஆளுநர் இவரை சட்ட மேலவை உறுப்பினராக்கினார்.
  • சட்டமேலவைத் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
  • இந்தியாவில் சட்டப் பேரவையின் முதல் பெண் உறுப்பினர் முத்துலட்சுமி ரெட்டி ஆவார்.
  • அந்தப் பெருமையைத் தமிழகமும் பெற்றது.
  • 1926 – 1930 வரை பணியாற்றினார்.
  • இவர் ஆற்றிய பணிகளும் குறிப்பிடத்தக்கவை: தேவதாசி ஒழிப்புச் சட்டம், விபச்சார ஒழிப்புத் திட்டம், பெண்கள் திருமண வயதை உயர்த்தும் சட்டம் போன்றவை ஆகும்.
  • தேவதாசி ஒழிப்புச் சட்டத்திற்குப் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. எனினும் அம்மையார் தமிழகமெங்கும் சூறாவளிப் பயணம் செய்து பல அறிஞர்களின் ஆதரவைப் பெற்றார்.
  • 1927 ல் காந்தி சென்னை வந்த போது அவரிடம் ஆதரவையும் பெற்றார். இதனால் அது சட்டமானது.
  • தேவதாசி இனத்தைச் சேர்ந்த பெண்கள் சிலரைச் சென்னையில் இருந்த “பெண்கள் காப்பகத்தில்” சேர்க்க விழைந்த போது காப்பாளர் மறுக்கவே அவர்களுக்குத் தன் வீட்டிலேயே அடைக்கலம் தந்தார்.
  • 1930 ல் அவ்வை இல்லத்தை தன் வீட்டிலேயே தொடங்கினார். இன்று அந்த அமைப்பு பள்ளிக்கல்வி, ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, கைத் தொழில் பயிற்சி, செவிலியர் பயிற்சி, கிராம மருத்துவர் பணிப் பயிற்சி, பெண்கள் விடுதி, முதியோர் இல்லம் எனப் பலவற்றையும் நடத்தி வருகிறது.
  • 1930ல் உப்புசத்தியாகிரகத்தின்போது காந்தியடிகள் கைது செய்யப்பட்டதை அறிந்து சட்டமன்ற மேலவைத் துணைத்தலைவர் பதவியையும், உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
  • 1933 ல் சிகாகோவில் நடந்த பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்.
  • 1949 ல் புற்றுநோய் நிவாரண நிதியை ஏற்படுத்தி இரண்டு ஆண்டுகள் முயன்று புற்றுநோய் நிலையத்தை அடையாற்றில் ஏற்படுத்தினார்.
  • மத்திய அரசு இன்று அதனை தென்மண்டல புற்றுநோய் ஆராய்ச்சி மையமாகவும், குணப்படுத்தும் மையமாகவும் தேர்ந்தெடுத்துள்ளது.
  • 1954 – 1957 வரை தமிழ்நாடு சமூக நல வாரியத் தலைவராகவும், சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் பணியாற்றினார்.
  • இவருக்கு 1956 ல் “பத்மபூ~ன்” விருது வழங்கப்பட்டது.
  • முத்துலட்சுமி ரெட்டி07.1968 ல் அடையாற்றில் தான் உருவாக்கிய புற்றுநோய் நிலையத்திலேயே காலமானார்.

தில்லையடி வள்ளியம்மை

  • 1898 ல் தென்னாப்பிரிக்காவில் ஜோகன்பர்க் என்ற இடத்தில் முனுசாமி – மங்களத்தம்மாள் ஆகியோருக்கு மகளாக பிறந்தார்.
  • இவரின் தாயார் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தில்லையடி என்ற ஊரைச் சேர்ந்தவர்.
  • இவர் குடும்பத்தின் மூத்த வாரிசு ஆதலால் தங்கள் குலத் தெய்வமான “வள்ளி” என்ற பெயரினை இட்டனர்.
  • தென்னாப்பிரிக்காவில் நிற வேற்றுமை சட்டம் இருந்;தது. அதன்படி ஒவ்வொரு இந்தியனும் ஐந்து வருடங்கள் ஒப்பந்த முறையில் கட்டாயமாக வேலை செய்ய வேண்டும்.
  • ஆங்கிலேயர்கள் வசிக்கும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடத்தில் தான் வசிக்க வேண்டும்.
  • ஒவ்வொரு இந்தியனும் ஒரு வெள்ளி நாணயத்தைக் கொடுத்து நுழைவுச் சீட்டு வாங்கி வைத்திருக்க வேண்டும். தவறினால் தண்டனை.
  • இரவு 9 மணிக்கு மேல் தாங்கள் வசிக்கும் இடத்தை விட்டு வெளியே வரக்கூடாது. வெளியே செல்ல விரும்பினால் ஐந்து வெள்ளி நாணயங்களை கொடுத்து அனுமதி பெற வேண்டும்.
  • இந்தியர்கள் யாரும் ஆள் இழுக்கும் வண்டியில் ஏறக்கூடாது.
  • இந்தியர்களுக்கு எந்த நிலமும் விற்கக்கூடாது. பள்ளியில் இந்தியர்கள் வெள்ளையருடன் சேர்ந்து உட்காரகூடாது, சேர்ந்து படிக்கக் கூடாது.
  • ரயில் வண்டியில் முதல் வகுப்பில் பயணம் செய்யக் கூடாது. மீறினால் வண்டியிலிருந்து வெளியேற்றலாம் போன்ற சட்டங்கள் பல இருந்தன. இவை வள்ளியம்மையின் இளம் உள்ளத்தில் எதிர்ப்பு உணர்ச்சியை வளர்த்தன.
  • 1906 ல் ஜோகன்ஸ்பர்க்கில் 3000 பேர் கூடிய மாநாட்டில் காந்தியடிகள் ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினார். அதில் தமிழ் பெண்கள் பலரும் கலந்து கொண்டனர். அவருள் வள்ளியம்மையும் ஒருவர்.
  • ஜோகன்ஸ்பர்க் நேசன், இந்திய நண்பன் போன்ற இதழ்களில் வெளிவந்த இந்தியரின் துயரச் செய்திகள் வள்ளியம்மையின் எதிர்ப்புணர்ச்சியை வளர்த்தன.
  • 1913 ல் தென்னாப்பிரிக்க நாட்டுத் திருமணப் பதிவுச் சட்டப்படியும், கிறித்தவ மதச் சட்டப்படியும் நடைபெறாத திருமணங்கள் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனை இந்தியர்கள் எதிர்த்தனர். ஆங்கிலேயரின் அடக்கு முறையைக் கண்டித்து12.1913 வால்க்ஸ்ரஸ்ட் நகரில் நடைபெற்ற மாதர் பேரணியில் 16 வயதே ஆன வள்ளியம்மையும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வள்ளியம்மை மாரிட்ஸ்பர்க் சிறையில் அடைக்கப்பட்டார். சிறை அதிகாரிகள் வள்ளியம்மையை மிகக் கொடுமையாக நடத்தினர்.
  • செய்து முடிக்க முடியாத அளவிற்கு வேலைப்பளு, சரியான உணவு இன்மை, தூய்மையற்ற சூழல், அதிகாரிகளின் சித்ரவதை இவற்றால் உடல் இளைத்து கடுஞ்சுரத்தால் பீடிக்கப்பட்டார். தண்டனையின் முழுக்காலம் முடியும் முன்பே 1914 ல் வள்ளியம்மை உடல் நலக்கேடு காரணமாக விடுதலை செய்யப்பட்டார்.
  • விடுதலையாகி வீடு வந்த வள்ளியம்மை தம் வீட்டில் படுத்தப்படுக்கையானார்.
  • உடல் நலம் பெறாமலேயே 1914 ல் பிப்ரவரி 22 ல் தம் 16 வயதிலேயே வள்ளியம்மை காலமானார்.
  • “என்னுடைய சகோதரியின் மரணத்தை விடவும் வள்ளியம்மையின் மரணம் எனக்குப் பேரிடியாக இருந்தது.” – காந்தியடிகள்.
  • காந்தியடிகள் வள்ளியம்மையின் மரணத்தைக் கேள்விப்பட்டு தன் சிறை அனுபவங்கள் பற்றிய கோப்பில் “இந்தப் போராட்டத்தில் தமிழர்கள் செய்திருப்பதைப் போல வேறு எந்த இந்திய சமூகத்தினரும் செய்யவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
  • “மாதர் குலத்துக்கு இலக்கணம்” இந்தியன் ஒப்பீனியனியன் இதழில் காந்தியார்.
  • வள்ளியம்மை நினைவாக: மத்திய அரசு அஞ்சல் தலை வண்டலூர் புலிக்குட்டிக்கு வள்ளி என்று பெயர்.
  • ஜோகன்ஸ்பர்க்கில் வள்ளியம்மையின் நினைவுச் சின்னத்தை காந்தியடிகள்07.1914 ல் திறந்து வைத்தார்.
  • 10.1969 ல் “தில்லையாடி” யை மாதிரி கிராமமாக ஆக்கும் பணியைத் தமிழக அரசு செய்தது.
  • தென்னாப்பிரிக்க வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் “தென்னாப்பிரிக்கச் சத்தியாகிரகம்” என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். கோ ஆப்டெக்ஸ் என்றழைக்கப்படும் தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் சென்னையிலுள்ள தனது அறுநூறாவது விற்பனை மையத்திற்கு “தில்லையாடி வள்ளியம்மை மாளிகை” என்று பெயர் சூட்டிப் பெருமைப்படுத்தி உள்ளது.

மேலும் கூடுதல் குறிப்புகளை அறிய கீழ் உள்ள இணைப்பில் PDF -பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்…

PDF Download

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download

TNPSC Group 2 நடப்பு நிகழ்வுகள் PDF Download

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும

Telegram Channel கிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!