விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் சன் டிவி சீரியல் ஹீரோ – எதிர்பார்ப்பின் உச்சத்தில் ரசிகர்கள்!

0
விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் சன் டிவி சீரியல் ஹீரோ - எதிர்பார்ப்பின் உச்சத்தில் ரசிகர்கள்!
விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் சன் டிவி சீரியல் ஹீரோ - எதிர்பார்ப்பின் உச்சத்தில் ரசிகர்கள்!
விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் சன் டிவி சீரியல் ஹீரோ – எதிர்பார்ப்பின் உச்சத்தில் ரசிகர்கள்!

சின்னத்திரையில் சீரியல்களை ஒளிபரப்புவதில் முதன்மை தொலைக்காட்சியாக வலம் வரும் விஜய் சேனலில் நம்ம வீட்டு பொண்ணு என்ற சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் தற்போது சன் டிவி சீரியல் நடிகர் ஒருவர் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகர்:

விஜய் டிவியை போல சன் தொலைக்காட்சியிலும் சினிமா டைட்டில்களை கொண்ட பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. வானத்தை போல, பூவே உனக்காக, ரோஜா என்று பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் பூவே உனக்காக சீரியல் சன் டிவியில் வெற்றிகரமான சீரியல்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியலில் உள்ள கதிர் பூவரசி ஜோடி ரசிகர்களின் பேவரைட் ஜோடிகளில் ஒன்றாக இருந்து வந்தது. இந்த சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக அருண் நடித்து வந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோவிதா, ராதிகா ப்ரீத்தி ஆகியோரும் நடித்து வந்தனர்.

Exams Daily Mobile App Download

இந்த சீரியலில் இருந்து முதலில் ஜோவிதா விலகினார். அவரை தொடர்ந்து நாயகன் அருணும் விலகினார். அவர் கதாபாத்திரத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு போன்ற தொடர்களில் நடித்த அசீம் கமிட் ஆனார். ராதிகா ப்ரீத்தி – அசீம் ஜோடி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் திடீரென்று நாயகியாக நடித்து வந்த ராதிகா ப்ரீத்தியும் சீரியலில் இருந்து விலகினார். பூவரசி கதாபாத்திரத்தில் தற்போது வர்ஷினி நடித்து வருகிறார். இந்த சீரியலில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வந்த அருண், ஜோவிதா, ராதிகா ப்ரீத்தி ஆகிய மூவருமே அதிலிருந்து விலகியது சீரியலை டல்லாக்கி உள்ளது.

இல்லத்தரசிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் – இனி பாமாயில் விலை குறையும்!

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் அருண் ரீ என்ட்ரி கொடுத்திருப்பதாக தெரிகிறது. இதனை அவரே தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். ஆனால் அருண் எந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. பூவே உனக்காக சீரியலில் நல்ல வரவேற்பை பெற்ற அருண், நம்ம வீட்டு பொண்ணு சீரியலிலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடிப்பார் என சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். நம்ம வீட்டு பொண்ணு தொடரில் நடிகர் சுர்ஜித் குமார், ஷப்னம், அஷ்வினி ஆனந்திதா, அருணா சுதாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!