சன் டிவி ‘ரோஜா’ சீரியல் நாயகனை தாக்கிய பொதுமக்கள் – ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு! வைரலாகும் வீடியோ!

0
சன் டிவி 'ரோஜா' சீரியல் நாயகனை தாக்கிய பொதுமக்கள் - ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு! வைரலாகும் வீடியோ!
சன் டிவி 'ரோஜா' சீரியல் நாயகனை தாக்கிய பொதுமக்கள் - ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு! வைரலாகும் வீடியோ!
சன் டிவி ‘ரோஜா’ சீரியல் நாயகனை தாக்கிய பொதுமக்கள் – ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு! வைரலாகும் வீடியோ!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் ஆரம்பத்தில் ரசிக்கப்பட்டாலும் கடந்த சில மாதங்களாக அணுவை காட்டிகொடுக்கும் முயற்சியில் கதையை ஜவ்வாக இழுத்து வந்தனர். அதை தொடர்ந்து தற்போது நீலாம்பரி யார் என்று தேடும் களத்தில் இறங்கி உள்ளார்கள். இந்நிலையில் ரோஜா சீரியல் கதாநாயகன் அர்ஜுனை பொதுமக்கள் தாக்குவது போன்ற வீடியோ ஒன்று ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களால் தாக்கப்பட்ட அர்ஜுன்:

டிஆர்பி ரேட்டிங்கில் கடந்த சில நாட்களாக முதலிடத்திற்கு நகர்ந்து வரும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் ஒன்று ரோஜா. இத்தொடரின் ஆரம்ப காலத்தில் ஓரளவு பார்வையாளர்களை ஈர்த்தாலும் இடைப்பட்ட காலத்தில் ஒளிபரப்பாகிய ரோஜா, அர்ஜுன் கெமிஸ்ட்ரி அதிக அளவில் ரசிகர்களை குவித்தது. சின்னத்திரையிலும் வெள்ளித்திரையில் காண்பிக்கப்படும் அளவிற்கு காட்சிகளை கொடுக்க முடியும் என்றால் அது ரோஜா சீரியலில் மட்டும் தான்.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த வீடியோ – வைரலாகும் பதிவு!

எவ்வளவுக்கு எவ்வளவு ரோஜா அர்ஜுன் கெமிஸ்ட்ரி டாப்பில் உள்ளதோ அந்த அளவிற்கு சீரியலின் கதையும் ஜவ்வாக உள்ளது என்பது மக்களின் கருத்து. ஏனென்றால் நடைபெறும் எல்லா வில்லத்தனத்திற்கும் காரணம் அணு என்று தெரிந்தும் அவளை காட்டி கொடுப்பதற்கு ஆயிரம் எபிசோடுகள் ஆகியது. இந்நிலையில் அணு கதை ஒருவழியாக முடிவுக்கு வந்து தற்போது புதிதாக நீலாம்பரி யார் என்று தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். தலையை சுற்றி மூக்கை தொட்ட கதையாக நீலாம்பரி ஹிஸ்டரியை தெரிந்து கொள்ள அவள் இருந்த சிறையில் விவரங்களை பார்த்தாலே தெரிந்து விடும். ஆனால் கதையை எப்படி எப்படியோ இழுத்து கொண்டு செல்கிறார்கள்.

கடை வசூலை கொடுக்கும் ஜனார்த்தனன், குடும்பத்தை நினைத்து கவலையில் ஜீவா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோடு!

தற்போது அடுத்து என்ன நடக்கும் என சுலபமாக யூகிக்கும் ரசிகர்கள் மத்தியில் திடீரென எதிர்பார்க்காத வகையில் சீரியலை குறித்த விவர 10 நொடியில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ரோஜா சீரியல் நாயகன் அர்ஜுனனை பொதுமக்கள் தாக்குவதை போன்றும் ரோஜா, சந்திரகாந்தா இடையில் சென்று தடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதை கண்ட ரசிகர்கள் இது என்னடா புது கதையா இருக்கு என வியக்கும் வகையில் இந்த வீடியோ பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!