முழு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமல் – நீச்சல் குளம், அங்கன்வாடி மையங்கள் மீண்டும் திறப்பு!

0
முழு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமல் - நீச்சல் குளம், அங்கன்வாடி மையங்கள் மீண்டும் திறப்பு!
முழு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமல் - நீச்சல் குளம், அங்கன்வாடி மையங்கள் மீண்டும் திறப்பு!
முழு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமல் – நீச்சல் குளம், அங்கன்வாடி மையங்கள் மீண்டும் திறப்பு!

மாநிலம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் நீச்சல் குளம், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என உத்திர பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கு தளர்வுகள்

கொரோனா தொற்றுநோய் சூழ்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தில் முழு ஊரடங்கு தொடர்புடைய பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, உத்தரப் பிரதேசத்தில் கொரோனா 3ம் அலைப்பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளாக விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கில் இருந்து படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது நீச்சல் குளம், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – மார்ச் 19 விடுமுறை!

இது தொடர்பாக உத்தரப் பிரதேச மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி வெளியிட்டுள்ள ஒரு உத்தரவில், ‘மாநிலம் முழுவதும் கொரோனா பரவலால் கட்டுப்படுத்தப்பட்ட செயல்பாடுகள் பலவற்றிக்கு கடந்த காலங்களில் அனுமதி கொடுக்கப்பட்டிருந்தாலும், நீச்சல் குளங்கள், நீர் பூங்காக்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் திருமணங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பிற செயல்பாடுகளை திறப்பதற்கு கட்டுப்பாடுகள் இருந்தன.

TN TRB கல்லூரி விரிவுரையாளர் தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

ஆனால் தற்போது நீச்சல் குளங்கள், நீர் பூங்காக்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களை திறக்க அரசு அனுமதி அளிக்கிறது. மேலும் திருமணங்கள் உள்ளிட்ட பிற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மக்கள் கட்டாயமாக முகக்கவசங்களை அணிந்து கொண்டு, முறையான கொரோனா நெறிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் அரங்கின் முழுத் திறனில் கலந்து கொள்ளலாம்’ என்று கூறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பொது மக்கள் கூடும் அனைத்து நடவடிக்கைகளும் முறையான கொரோனா நெறிமுறையுடன் இணங்கி செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!