தமிழக மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாட்கள் குறைப்பு? கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!

0
தமிழக மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாட்கள் குறைப்பு? கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!
தமிழக மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாட்கள் குறைப்பு? கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!
தமிழக மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாட்கள் குறைப்பு? கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் மே மாதம் வரை பள்ளிகள் செயல்படும் என்று சொல்லப்பட்ட நிலையில் அவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். இவ்வாறு பள்ளிகள் தாமதமாக தொடங்கியதால் இந்த ஆண்டு கோடை கால விடுமுறை குறையவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோடை விடுமுறை:

தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் காரணமாக கடந்த 2 வருடமாக பல மாற்றங்கள் அமைந்ததில் பள்ளி, கல்லூரிகளும் ஒன்று.அதினால் ஆன்லைன் வாயிலாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு நோய் தொற்று பரவலின் தாக்கம் குறைந்து 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ல் அனைத்து பள்ளிகளும் முழுமையாக திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து 10,11,12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையும் வெளியாகியது. இவ்வாறு கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதால், பொதுத் தேர்வுகள் மற்றும் இறுதித் தேர்வுகள் மே மாதம் இறுதி வரை நடைபெற உள்ளன.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.33 உயர்ந்து கிராமிற்கு ரூ.4,919 விற்பனை – விலை நிலவரம்!

அதாவது 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் மாதம் 5 முதல் மே மாதம் 2 வரை நடைபெறும் எனவும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 ல் தொடங்கி மே 30 வரையிலும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 ல் தொடங்கி மே 31 வரையிலும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 ல் தொடங்கி மே 28 ஆம் தேதி வரையிலும் பொது தேர்வுகள் நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், தற்போது 6 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் 13 வரையிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையில் கோடை விடுமுறையில் பள்ளிகள் செயல்படுவது தேவையற்றது என பல்வேறு தரப்பினர் கூறி வந்தாலும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் வெளிவந்த தகவல்களில் மாற்று கருத்துக்கள் இருக்காது என திட்டவட்டமாக கூறியிருந்தார். இந்நிலையில் மே 13 முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறையாக தமிழக அரசு அறிவித்திருந்ததை அடுத்து 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஏப்ரல் 24 முதல் சிறப்பு வகுப்புகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு பள்ளி கோடை விடுமுறை காலம் வெகுவாக குறைந்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!