தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கோடை விடுமுறை!

0
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கோடை விடுமுறை!
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கோடை விடுமுறை!
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கோடை விடுமுறை!

தமிழகத்தில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு கோடைகால விடுமுறை பட்டியலும் வெளியாகி உள்ளது.

கோடை விடுமுறை:

தமிழகத்தில் கடந்த வருடம் பரவிய கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால் மாணவர்களுக்கு அகமதிப்பிட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் பொதுத்தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. இதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் மே 28 வரை பொதுத்தேர்வு நடைபெறும். மேலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் மே மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெறும்.

TNUSRB 444 உதவி ஆய்வாளர் (SI) பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப். 7!

அதனை தொடர்ந்து 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9ஆம் தேதி தொடங்கி மே மாதம் 31ஆம் தேதி வரை நடைபெறும். செய்முறை தேர்வு அடுத்த மாதம் 5 ஆம் தேதி முதல் மே மாதம் 2 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 10,11,12ம் வகுப்புகளை தொடர்ந்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு நெருங்கி விட்ட நிலையில் விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் 13 ஆம் தேதி கடைசி வேலைநாளாகும். அதன் பிறகு மே மாதம் 13 ஆம் தேதியில் இருந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. மே 13 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!