விஜய் டிவி பிரபலம் அறந்தாங்கி நிஷாவின் சினிமா பயணம் – ரசிகர்கள் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்!

0
விஜய் டிவி பிரபலம் அறந்தாங்கி நிஷாவின் சினிமா பயணம் - ரசிகர்கள் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்!
விஜய் டிவி பிரபலம் அறந்தாங்கி நிஷாவின் சினிமா பயணம் - ரசிகர்கள் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்!
விஜய் டிவி பிரபலம் அறந்தாங்கி நிஷாவின் சினிமா பயணம் – ரசிகர்கள் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்!

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. அவர் தன்னுடைய வெற்றி பயணத்தை பற்றியும், சினிமாவுக்காக அவர் செய்த தியாகங்களையும் பற்றியும் வெளிப்படையாக பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார்.

நடிகை அறந்தாங்கி நிஷா:

அறந்தாங்கி நிஷா, ஒரு நகைச்சுவையாளராக தமிழ் சினிமாவில் புகழ் பெற்றவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று இரண்டாம் இடத்தினை பெற்று வெற்றி பெற்றுள்ளார். பின் தமிழ் சினிமாவால் நகைச்சுவை கதாபாத்திரம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளராக தன்னை தானே செதுக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு கலக்கி இருக்கிறார்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் நடிகை திடீர் மாற்றம் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

அவர் தற்போது சீரியலில் நடித்து வருகிறார். அவர் ஒரு நடிகையாக இல்லாமல் பல சமூக செயல்களில் கூட தன்னுடைய கருத்தை முன் வைத்து இருக்கிறார். சிறுமி ஒருவர் கற்பழிப்பு குறித்தும், தற்போது ஹிஜாப் பிரச்சனை பற்றியும் சொல்லி இருக்கிறார். மேலும் ஒரு பெண்ணாக இருந்து எப்படி வாழ்க்கையில் சாதித்தார் என்பது குறித்து மனம் திறந்து பேட்டி கொடுத்து இருக்கிறார். பின் நிறம் வெற்றிக்கு தடையில்லை என சொல்லி இருக்கிறார்.

பின் வாய்ப்புகள் எல்லாருக்கும் கிடைக்கும் அதை எல்லாம் பயன்படுத்தி தான் நான் இந்த இடத்தில் இருக்கேன் என சொல்லி இருக்கிறார். பின் தன்னுடைய மகளுக்கு அடிபட்டது குறித்து பேசி இருக்கிறார். அதில் அவருக்கு முடியாமல் இருக்கும் போது பல இளைஞர்கள் அவருக்கு உதவி செய்ததாகவும் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கூட 10 ஆண்களுக்கு மத்தியில் நான் இருந்தேன் அவர்களின் ஆதரவு இல்லாமல் என்னால் செய்ய முடியாது என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!