TNUSRB 444 உதவி ஆய்வாளர் (SI) பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப். 7!

0
TNUSRB 444 உதவி ஆய்வாளர் (SI) பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப். 7!
TNUSRB 444 உதவி ஆய்வாளர் (SI) பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப். 7!
TNUSRB 444 உதவி ஆய்வாளர் (SI) பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப். 7!

தமிழக காவல் துறையில் உள்ள 444 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக TNUSRB தெரிவித்து உள்ளது. இந்த பதவிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மார்ச் 8ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் குறிப்பிட்டு உள்ளது.

444 உதவி ஆய்வாளர் (SI) காலிப்பணியிடங்கள்:

கொரோனா காரணமாக எந்த ஒரு போட்டித் தேர்வுகளும் கடந்த 2 வருடங்களாக நடக்கவில்லை. இதனால் ஏராளமான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. மேலும் வருடக்கணக்கில் அரசு தேர்வுகளுக்காக தயாராகி வருபவர்கள் தேர்வு அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. மேலும் அரசு போட்டித் தேர்வுக்கான அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. தமிழக காவல், சிறை மற்றும் தீயணைப்பு போன்ற சீருடை சேவைகளுக்கான பணியாளர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்(TNUSRB) செயல்பட்டு வருகிறது.

ரயில்வே துறையில் 1.49 லட்சம் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இந்த வகையில் தமிழகத்தில் காலியாக 444 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு கடந்த 8ம் தேதி வெளியானது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 8 முதல் ஏப்ரல் 7-ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வுக்கு ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர்களும், காவல்துறையில் பணியாற்றுபவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்தத் தேர்வுக்கு இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 வரை வசூலிக்கப்படுகிறது.

இத்தேர்வில் முதன்முறையாக தமிழ் மொழித் தகுதித் தேர்வை அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி நடத்த உள்ளது. இந்த தேர்வுக்காக தேர்வு வாரியத்தில் கட்டுப்பாட்டு அறையில் உதவி மையம் அமைக்கப்படுகிறது. இதுபோன்ற உதவி மையங்கள், மாநிலம் முழுவதிலும் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும் பணி நேரத்தில் செயல்படும். இணையவழி விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் கேட்பதற்கு விண்ணப்பதாரர்கள் “உதவி மையத்தை” பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் 044-40016200, 044-28413658 ஆகிய தொலைப்பேசி எண்கள், 94990 08445 என்ற கைபேசி எண் ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் உதவி மையத்தை தொடர்புக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!