நாளை முதல் ஜூன் 14 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!
மாநிலத்தில் தற்போது நிலவி வரும் கோடை வெப்பநிலையை கருத்தில் கொண்டு நாளை (ஏப்ரல் 24) முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க சத்தீஸ்கர் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
கோடை விடுமுறை
சத்தீஸ்கர் மாநிலத்தில் கோடை வெயில் 42 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகரித்துள்ள நிலையில் ஏப்ரல் 24 முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்த கோடை விடுமுறை முடிந்ததும் ஜூன் 15ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், தற்போது நிலவும் வெப்பச்சலனம் காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை முன்கூட்டியே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
இப்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான விடுமுறைகள் ஏப்ரல் 24 ஆம் தேதி தொடங்கும் என்றும் புதிய கல்வி அமர்வு ஜூன் 15 ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஏப்ரல் 25 ஆம் தேதியன்று இறுதி வரி மதிப்பீடு திட்டமிடப்பட்ட பள்ளிகளில், தானாக முன்வந்து மதிப்பீட்டில் சேர விரும்பும் மாணவர்கள் அவ்வாறு செய்யலாம் என்றும் ஆசிரியர்களுக்கும் இந்த கோடை விடுமுறை கிடைக்கும் ஆனால் பயிற்சி மற்றும் நிர்வாகப் பணிகள் தொடரும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நாளை முதல் ஏப்.26 வரை முழு ஊரடங்கு அமல் – அரசின் திடீர் உத்தரவு! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
சத்தீஸ்கர் மாநிலத்தில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸுக்கு மேல் சென்றுள்ளது. குறிப்பாக ராய்ப்பூர், துர்க், பிலாஸ்பூர் மற்றும் சுர்குஜா பிரிவுகளின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான வெப்ப நிலை நிலவுகிறது. இதற்கு முன்னதாக, தொற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டதால் கல்வி அமர்வை நீட்டிக்கும் போது கோடை விடுமுறையின் காலம் குறைக்கப்பட்டது. அந்த வகையில் இந்த கல்வியாண்டு மே 14 வரை தொடரும் என்று முடிவு செய்யப்பட்டு இப்போது ஏப்ரல் 23 வரை மாற்றியமைக்கப்பட்டது.