ஜூலை 1 முதல் தினசரி காலை 8 மணிக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு உத்தரவு!
ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை முடிவடைந்து நாளை (ஜூலை 1) முதல் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் மீண்டுமாக திறக்கப்பட இருக்கும் நிலையில், தற்போது வகுப்புகள் செயல்படும் நேரங்களில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
தற்போது ஹரியானா மாநிலத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூலை 1 முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் ஜூலை 1 முதல் பள்ளிகள் செயல்படும் நேரங்களில் மாற்றங்கள் அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி தினந்தோறும் காலை 8 மணி முதல் மதியம் 2:30 மணி வரை பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஹரியானா மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
இதற்கு முன்னதாக அம்மாநிலத்தில், பள்ளிகளுக்கான கோடை விடுமுறை அளிக்கப்படுவதற்கு முன் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை வகுப்புகள் நடத்தப்பட்டன. இருப்பினும் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூலை 1 முதல் பள்ளி நேரங்கள் காலை 8:00 மணி முதல் மதியம் 2:30 மணி வரை இருக்கும் என்று அரசின் அதிகாரப்பூர்வ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த உத்தரவில், ‘ஹரியானா மாநிலம் முழுவதும் நிலவும் கடுமையான வெப்ப நிலை காரணமாக, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் நேரம் காலை 8 மணி முதல் மதியம் 2:30 மணி வரைக்கும் மாற்றப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.
அந்த வகையில் இப்போது 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் காலை 8 மணி முதல் மதியம் 2:30 மணி வரை முழு அளவிலான வகுப்பு நேரங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் இந்த புதுப்பிக்கப்பட்ட நேரத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும் அரசாங்கம் வலியுறுத்தி இருக்கிறது. இது தவிர பள்ளிகளை மீண்டும் திறக்கும் போது தேவையான அனைத்து கொரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்தவும் பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.