தம்பிகளை நினைத்து கவலைப்படும் மூர்த்தி, புது வீட்டிற்கு செல்ல திட்டமிடும் கதிர் முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
தம்பிகளை நினைத்து கவலைப்படும் மூர்த்தி, புது வீட்டிற்கு செல்ல திட்டமிடும் கதிர் முல்லை - இன்றைய
தம்பிகளை நினைத்து கவலைப்படும் மூர்த்தி, புது வீட்டிற்கு செல்ல திட்டமிடும் கதிர் முல்லை - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
தம்பிகளை நினைத்து கவலைப்படும் மூர்த்தி, புது வீட்டிற்கு செல்ல திட்டமிடும் கதிர் முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக பெரிய வீட்டில் இருக்க வேண்டும் என நினைத்ததாக சொல்ல தனம் எல்லாம் சரியாகிவிடும் என சொல்கிறார். பின் கதிர் முல்லையும் புது வீட்டிற்கு செல்வது பற்றி திட்டமிடுகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மூர்த்தியை கண்ணனும் ஜீவாவும் படுக்க வைத்துவிட்டு செல்ல தம்பிகளை பார்த்தீங்களா என தனம் கேட்கிறார். உடனே மூர்த்தி எல்லாரும் வீட்டில் ஒன்றாக இருக்க வேண்டும் பெரிய வீடு கட்ட வேண்டும் என நினைத்தோம் ஆனால் அது நடக்காது போல என மூர்த்தி சொல்கிறார். புது வீடு கட்ட வேண்டும் என நினைத்ததை தொடர்ந்து ஒரே பிரச்சனையாக இருக்கிறது என சொல்கிறார். அதை கேட்டு தனம் எல்லாரும் ஒரே வீட்டில் இருக்க தான் போகிறோம் அடுத்த பிறந்தநாளை நாம எல்லாரும் சேர்ந்து தான் கொண்டாட இருக்கிறோம் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் ஜீவா நேரமாக படுக்க வர மீனா ஏன் இவ்வளவு நேரமாகிவிட்டது என கேட்கிறார். பின் ஜீவா படுத்தாலும் தூக்கம் வராது என சொல்ல கதிர் வெளியே போனால் மூர்த்தி பேசமாட்டேன் என சொன்னது பற்றியும் தனம் கதிரை மீண்டும் வீட்டிற்கு வர சொல்ல ஆனால் கதிர் முடியாது என சொன்னதையும் நினைத்து பார்க்கிறார். பின் ஜீவா கண்ணீருடன் இருக்க மீனா கவலைப்படாதே என சொல்கிறார். கதிரிடம் பேசி பார்த்தியா என கேட்க அவனுடைய நண்பனிடம் பேசினேன்.

எதோ வீடு பார்த்து இருக்கிறானாம் என சொல்கிறார். அதான் பார்த்தேன் முல்லை அம்மா இவ்வளவு பேசிய பின் கூட கதிர் அந்த வீட்டில் இருக்கிறார் என சொல்ல ஜீவா இங்கிருந்து கிளம்பும் போதே கதிர் தனியாக போவான் என நினைத்தேன் ஆனால் அண்ணனிற்கு முடியாமல் போனதால் நேரமாக முடிவெடுத்து இருக்கிறான் என சொல்கிறார். பின் மீனா அவர்கள் இதெல்லாம் யோசித்து தான் எடுத்துள்ளதாக சொல்ல அதை கேட்டு ஜீவாவிற்கு கோவம் வருகிறது.

உன்னிடம் பணம் வாங்கியதால் தான் எல்லாம் நடந்தது என சொல்ல மீனா எல்லாம் சரியாகிடும் என தூங்க சொல்கிறார். மறுபக்கம் ஐஸ்வர்யா தூங்கி கொண்டிருக்க கண்ணன் வந்து கொஞ்ச நேரம் பேசலாம் என சொல்கிறார் அப்போது கண்ணன் இனிமேல் நான் கடைக்கு போக வேண்டும் பொறுப்புடன் இருக்க வேண்டும் என சொல்ல, ஐஸ்வர்யா உன்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்தது நீ கடைக்கு போக வேண்டும் என்பதற்காக இல்லை என சொல்கிறார்.

ரோஹித்தை மாட்டிவிட பின் தொடரும் வெண்பா, சாந்தியிடம் பேசியதை சொன்ன தில்லி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

அண்ணனிற்கு சரியாகும் வரை கடைக்கு போக வேண்டும் என சொல்ல ஆனால் உன்னை கஷ்டப்பட்டு படிக்கச் வைத்தது எதற்காக என கேட்கிறார். நீ 50000 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு போனால் எல்லாம் சரியாகிடும் என சொல்ல அதுவும் சரி தான் என கண்ணன் சொல்கிறார். மறுபக்கம் முல்லை கதிரை சாப்பிட்டீங்களா என கேட்க, கதிர் என் நண்பருடன் சேர்ந்து தான் வேலை பார்க்க போனேன் அவன் தான் ஆர்டர் கொடுத்தான் என சொல்கிறார்.

முல்லை வீடு பார்த்து இருப்பதாக சொன்னீர்கள் எப்படி இருக்கிறது வீடு என கேட்க கதிர் முல்லையிடம் நீ எதிர்பார்த்தது போல இல்லை ஆனால் நமக்கு சரியாக இருக்கும் என சொல்கிறார். பின் கதிர் உன் அம்மா அப்பா பேசியது தவறு என சொல்ல ஆமாம் தனம் அக்காவை அம்மா ரொம்ப பேசினார்கள் என சொல்கிறார். இங்கே இருந்து எதுவும் கொண்டு போக வேண்டாமா என கேட்க ஆமாம் நீ மட்டும் என்னுடன் வந்தால் போதும் என கதிர் சொல்கிறார். உடனே கதிர் நாம நல்லா இருப்போம் நீ கவலைப்படாதே என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!