கள்ளக்குறிச்சி பள்ளியில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை – இரண்டு ஹார்ட் டிஸ்குகள் கண்டுபிடிப்பு!

0
கள்ளக்குறிச்சி பள்ளியில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை - இரண்டு ஹார்ட் டிஸ்குகள் கண்டுபிடிப்பு!
கள்ளக்குறிச்சி பள்ளியில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை - இரண்டு ஹார்ட் டிஸ்குகள் கண்டுபிடிப்பு!
கள்ளக்குறிச்சி பள்ளியில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை – இரண்டு ஹார்ட் டிஸ்குகள் கண்டுபிடிப்பு!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள சின்னசேலம் தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.

சிறப்பு புலனாய்வு குழு விசாரணை:

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மரணமடைந்த விவகாரம் தொடர்பாக கடந்த 17ஆம் தேதி கலவரம் வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியை சூறையாடி 40க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீவைத்தனர். மேலும் இந்த கலவரத்தில் போலீசாரும் காயமடைந்தனர். இதையடுத்து கலவரத்தில் ஈடுபட்டதாக சுமார் 300 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மாணவி மர்ம மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.296 குறைவு – பொதுமக்கள் மகிழ்ச்சி!

இந்நிலையில் மாணவியின் மர்ம மரணம் தொடர்பாக நடந்த கலவரத்தை விசாரிக்க 18 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். 6 டிஎஸ்பி-க்கள், 9 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 3 சைபர் கிரைம் பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். மேலும், சின்னசேலம் போலீசார் பதிவு செய்த 3 குற்ற வழக்குகள், அது தொடர்பான ஆவணங்கள் இந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடைபெற்ற வன்முறை குறித்து காவல்துறை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

சேலம் டிஐஜி பிரவீன்குமார் தலைமையிலான காவல் அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும் பள்ளியில் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு காட்சிகளை பதிவு செய்கின்றனர். அதாவது உளவுத்துறை வீடியோ ஆதாரங்களை கொண்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. சிறப்பு புலனாய்வு குழுவினருடன் தடயவியல் நிபுணர் மற்றும் கைரேகை நிபுணர்களும் ஆய்வு செய்கின்றனர். ஆய்வின் போது பல கம்ப்யூட்டர்கள் தீ வைக்கப்பட்டு சேதமடைந்து இருந்தது, இருப்பினும் சேதம் அடையாத இரண்டு ஹார்ட் டிஸ்க்குகள் தற்போது பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here