தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.296 குறைவு – பொதுமக்கள் மகிழ்ச்சி!

0
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.296 குறைவு - பொதுமக்கள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.296 குறைவு - பொதுமக்கள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.296 குறைவு – பொதுமக்கள் மகிழ்ச்சி!

சென்னையில் கடந்த சில நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே இருந்து வந்தது. இந்நிலையில், ஒரே நாளில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.296 அளவுக்கு குறைந்துள்ளதால் தாய்மார்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை:

சென்னையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் தங்கத்தின் விலை எப்போது குறையும் என தாய்மார்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். அதாவது, எப்போதுமே பங்குச்சந்தை நிலவரத்தை பொறுத்து தான் தங்க நகைகளின் விலை தீர்மானிக்கப்படுகிறது. திடீரென விலையேறுவதற்கும் குறைவதற்கும் இது தான் காரணம். மேலும், சிறிய தொகையாக இருந்தாலும் தங்க நகைகளில் தான் தாய்மார்கள் முதலீடு செய்ய வேண்டும் என விரும்புகின்றனர்.

Exams Daily Mobile App Download

இது மட்டுமல்லாமல் தங்களது வருமானத்தில் வரும் தொகையை நகை சீட்டு மூலமாகவும் சிறுக சிறுக சேமித்து தங்க நகைகளை வாங்க விரும்புகின்றனர். நேற்றைய விலையை பார்க்கும் போது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.72 உயர்ந்து ரூ.37,336-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.9 அதிகரித்து ரூ.4,667 க்கு விற்பனையாகி வந்தது. மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.30 காசு உயர்ந்து ரூ.61.00 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.61,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ரேஷன் அட்டைத்தார்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய விதிமுறைகள் அமல்!

நேற்றைய விலையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதாவது, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 சரிந்து ரூ.37,040 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.37 குறைந்து ரூ.4,630க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் ரூ.61க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.61,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.296 குறைந்ததால் தாய்மார்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!