ICC 2021 ஐசிசி சிறந்த பேட்டராக இந்திய வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனா தேர்வு – ரசிகர்கள் உற்சாகம்!

0
ICC 2021 ஐசிசி சிறந்த பேட்டராக இந்திய வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனா தேர்வு - ரசிகர்கள் உற்சாகம்!
ICC 2021 ஐசிசி சிறந்த பேட்டராக இந்திய வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனா தேர்வு - ரசிகர்கள் உற்சாகம்!
ICC 2021 ஐசிசி சிறந்த பேட்டராக இந்திய வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனா தேர்வு – ரசிகர்கள் உற்சாகம்!

ஐசிசி 2021ஆம் ஆண்டுக்கான மகளிர் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக இந்திய வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ICC அறிவிப்பு:

2021 ஆம் ஆண்டுக்கான ஐசிசி யின் மகளிர் சிறந்த கிரிக்கெட் பேட்ஸ்மேனுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ICC ஆண்டுதோறும் சிறப்பாக விளையாடிய வீரர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. இந்த முறை ICC 2021 ஆண்டிற்கான பிளேயிங் 11 அணியில் இந்திய மகளிர் அணியை சேர்ந்த மிதாலி ராஜ் மற்றும் ஜூலன் கோஸ்வாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதை தொடர்ந்து தற்போது இந்திய தொடக்க ஆட்ட வீராங்கனையான ஸ்ம்ரிதி மந்தனா சிறந்த பேட்ஸ்மேனாக தேர்வாகி உள்ளார்.

தமிழகத்தில் கல்லூரி, பல்கலை பேராசிரியர்களுக்கு ஜாக்பாட் – அறிவிக்குமா அரசு?

ஸ்ம்ரிதி மந்தனா கடந்த ஆண்டு 22 சர்வதேசப் போட்டிகளில் 38.86 என்ற சராசரியில் ஒரு சதம் மற்றும் 5 அரை சதங்களுடன் 855 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா சொந்த மண்ணில் 8 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றது. இரண்டு வெற்றிகளிலும் மந்தனாவின் பங்கு மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது. 2 வது ஒருநாள் போட்டியில் இந்தியா 158 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. மந்தனா 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அது தொடரை சமன் செய்ய உதவியது.

பணியாளர்களுக்கு 2022 வருடத்திற்கான தொடர் விடுமுறை நாட்கள் – முழு விபரங்கள் இதோ!

இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் மந்தனா 78 ரன்கள் குவித்து அபாரமாக ஆடி ஆட்டமிழந்தார். ஒருநாள் தொடரில் இந்திய பெற்ற ஒரே வெற்றியில் ஸ்ம்ரிதி மந்தனா 49 ரன்கள் எடுத்தார். மேலும் T20 தொடரில் அவர் 15 பந்துகளில் 29 மற்றும் அரைசதம் அடித்து அசத்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மந்தனா நல்ல பார்மில் இருந்தார் ஒரு நாள் தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்தார். மந்தனா இரண்டாவது ஒருநாள் போட்டியில் 86 ரன்கள் எடுத்தார். இப்போட்டிகாக ஆட்ட நாயகன் விருதும் பெற்றார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!