பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி போட்டியாளர்கள் யார்? இன்று மாலை 6 மணிக்கு! ப்ரோமோ ரிலீஸ்!
பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன்களை கடந்து மாபெரும் வெற்றி அடைந்த நிலையில், தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட இருக்கிறது. அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் ப்ரோமோ:
பிக்பாஸ் நிகழ்ச்சி மாறுபட்ட கான்செப்ட் உடன் ஒளிபரப்பாகி வரும் ஒரு ரியலிட்டி நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறையை சார்ந்த பிரபலங்கள் 100 நாட்களுக்கு ஒரே வீட்டில் வெளி உலகம் தெரியாமல் தங்கவைக்கப்படுவார்கள். அவர்களில் ஒருவர் தான் பிக்பாஸ் டைட்டில் வின்னராக இருப்பார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் நடந்து முடிந்து இருக்கிறது. தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என புதிய நிகழ்ச்சி ஓடிடி தலத்தில் வெளியாக இருக்கிறது.
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் இருந்து விலகும் ஆல்யா மானசா – ப்ரோமோ ரிலீஸ்!
அதில் இது வரை இந்த 5 சீசன்களில் விளையாடி பிரபலமான போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி வருகிற 30 ஆம் தேதி தொடங்கப்பட இருக்கிறது. அதற்கான போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் யார் என தினசரி சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. மேலும் இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ் மற்றும் தீனா வருகின்றனர்.
விஜய் டிவி சீரியலில் நடிக்க தொடங்கிய Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சி பிரபலம் – ரசிகர்கள் வாழ்த்து!
அவர்கள் போட்டியாளர்கள் குறித்த க்ளூ கொடுக்கின்றனர். அது யார் என மக்கள் யூகிக்கும் அளவிற்கு போட்டியாளர்கள் வர இருக்கின்றனர். இந்த ப்ரோமோ தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்த 5 சீசனிலும் கன்டென்ட் கொடுத்த போட்டியாளர்கள் வர இருப்பதால் இந்த சீசன் களைகட்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் தற்போது வெளியான ப்ரோமோவில் பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பற்றி இன்று மாலை 6 மணிக்கு ப்ரோமோ வெளியாக இருப்பதாக காட்டப்பட்டுள்ளது.