மாநிலம் முழுவதும் பள்ளிகள் 33% திறனுடன் மீண்டும் திறப்பு? அரசு முடிவு!

0
மாநிலம் முழுவதும் பள்ளிகள் 33% திறனுடன் மீண்டும் திறப்பு? அரசு முடிவு!
மாநிலம் முழுவதும் பள்ளிகள் 33% திறனுடன் மீண்டும் திறப்பு? அரசு முடிவு!
மாநிலம் முழுவதும் பள்ளிகள் 33% திறனுடன் மீண்டும் திறப்பு? அரசு முடிவு!

ஹரியானா மாநிலத்தில் கொரோனா பேரலைத்தொற்று தாக்கத்தினால் ஜனவரி 26 வரை மூடப்பட்டுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டுமாக 33% திறனுடன் திறக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

நாடு முழுவதும் கொரோனா 3ம் அலைத்தொற்று பரவி வந்த சூழலில் ஹரியானா மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. அந்த வகையில் இம்மாத துவக்கத்தில் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் வரும் 26ம் தேதி வரை அடைக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பள்ளிகளை மூடுவதற்காக கொடுக்கப்பட்ட கால அவகாசம் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருப்பதால், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று ஹரியானா கல்வி அமைச்சர் கன்வர் பால் தெரிவித்திருக்கிறார்.

TNPSC இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு – புதிய அறிவிப்பு!

இது குறித்து அவர் கூறும் போது, ‘ஹரியானா மாநிலத்தில் பள்ளிகளை மீண்டுமாக திறப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று வழக்குகள் குறையும் போது, நாங்கள் அதைப் பற்றி சிந்திப்போம். இருப்பினும், 33% திறன் கொண்ட பள்ளிகளை வெவ்வேறு நாட்களில் மீண்டும் திறக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

ஜீ தமிழ் “அன்பே சிவம்” சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை – ரசிகர்கள் ஷாக்!

இது தவிர ஹரியானா மாநில சுகாதார அமைச்சர் அனில் விஜ், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி போடப்படாத 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பள்ளி வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். மறுபக்கத்தில், இந்த கல்வியாண்டு முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு கட்டாய வாரியத் தேர்வை நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!