TNPSC இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு – புதிய அறிவிப்பு!

0
TNPSC இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு - புதிய அறிவிப்பு!
TNPSC இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு - புதிய அறிவிப்பு!
TNPSC இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு – புதிய அறிவிப்பு!

தமிழக அரசின் பல்வேறு அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் TNPSC தேர்வு வாரியத்தின் மூலம் போட்டித்தேர்வுகள் மற்றும் நேரடி நியமன முறையில் பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை:

தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசு துறைகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை. அதாவது தமிழக அரசு துறைகளில் உள்ள பல்வேறு பணியிடங்கள் TNPSC தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள செயல் அலுவலர் நிலை 1 பதவிகளில் ஏற்பட்டுள்ள 4 காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Post Office இல் பெண் குழந்தைகளுக்கான சூப்பர் சேமிப்பு திட்டம் – முழு விபரங்கள் இதோ!

இந்த பணிகளுக்கு இந்து சமூகத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.37,700 முதல் 1,19,500 வரை ஊதியம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு வணிகவியல், கலை, அறிவியல் மற்றும் சட்ட படிப்புகளில் இளநிலை முடித்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தோருக்கு மீன்வளத்துறையில் வேலை – ஜன.31 கடைசி நாள்!

01.07.2022 தேதிப்படி 35 வயதிற்குள் உள்ள அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்து தேர்வு ஏப்.23ம் தேதி காலை தாள் I, மதியம் தாள் II மற்றும் ஏப்.24ம் தேதி தாள் III என எழுத்து தேர்வு நடைபெறும். இந்த காலிப்பணியிடங்களுக்கு www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் வரும் பிப்.21ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.  இது குறித்த கூடுதல் விபரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/2022_01_EO_GR_I_Notfn_Eng.pdf  என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!