இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு – 80 காலிப்பணியிடங்கள் || 10வது தேர்ச்சி..!
இந்திய கடலோர காவல்படையில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியது. இந்த அறிவிப்பில் Engine Driver, Fitter, Painter, Fireman, MTS போன்ற பல்வேறு பணிகளுக்கு என்று தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடைய கேட்டுக்கொள்கிறோம். மேலும் இப்பணிக்கான தகவல்களை எளிமையாக இப்பதிவில் வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Indian Coast Guard |
பணியின் பெயர் | Engine Driver, Fitter, Painter, Fireman, MTS & etc |
பணியிடங்கள் | 80 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.01.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
ICG காலிப்பணியிடம் :
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, Engine Driver, Fitter, Painter, Fireman, MTS பணிகளுக்கு என்று மொத்தம் 80 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
Indian Coast Guard கல்வி தகுதி :
அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 10ம் வகுப்பு / 12 ம் வகுப்பு / ITI / Diploma போன்ற ஏதேனும் பணிக்கு சம்பந்தப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் டிரைவர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் HEAVY & LIGHT Motors Vehicles Licence வைத்திருக்க வேண்டும்.
இந்திய கடலோர காவல்படை முன் அனுபவம் :
விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் பதவி மற்றும் பணியை பொறுத்து சம்பந்தப்பட்ட துறைகளில் விண்ணப்பதாரர் கட்டாயம் 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
ICG வயது வரம்பு :
பணிக்கு தகுந்தாற்போல் மாறுபட்ட வயது வரம்பு மற்றும் வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை குறித்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்வையிடலாம்.
Indian Coast Guard ஊதிய விவரங்கள் :
மேற்கண்ட பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவிகளை பொறுத்து ரூ.18,000/- முதல் ரூ.81,100/- வரை மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.
இந்திய கடலோர காவல்படை தேர்வு முறை :
- Written Exam
- Trade Test / Skill Test
- Physical Tests
ICG விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிகளுக்கு ஆடிவமுள்ள மற்றும் தகுதியான நபர்கள் கீழ் உள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு பதிவர்கள் அல்லது விரைவுத் தபால் மூலம் 31.01.2022 அன்றுக்குள் வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும்.