10 வகுப்பு தேர்வு முடிவுகள் 2024 – முதல் மூன்று மாவட்டங்கள் எது?

0
10 வகுப்பு தேர்வு முடிவுகள் 2024 - முதல் மூன்று மாவட்டங்கள் எது?
10 வகுப்பு தேர்வு முடிவுகள் 2024 – முதல் மூன்று மாவட்டங்கள் எது?

தமிழகத்தில் கடந்த மார்ச் முதல் ஏப்ரல் நடைபெற்ற 10ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. மொத்தம் 9.10 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில் 8,18,743 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4 லட்சத்து 22 ஆயிரம் மாணவிகளும், 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 மாணவர்களும் அடங்குவர். வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட அளவில், அரியலூர் மாவட்டம் 97.31% தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் வகித்தது. அடுத்ததாக சிவகங்கை மாவட்டம் 97.02% தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டும் சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இராமநாதபுரம் மாவட்டம் 96.36% தேர்ச்சியுடன் 3ம் இடம் வகிக்கிறது.

TNPSC குரூப் 4 தேர்வு – இலக்கணம் முக்கிய வினாவிடைகள்!!

இறுதியாக 82.07% தேர்ச்சி பெற்ற வேலூர் மாவட்டம் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதே போல இம்முறை 30646 பேர் சதமடித்து உள்ளனர். எந்தெந்த பாடங்களில் எத்தனை பேர் சதம் என்ற விகிதத்தை கீழே காணலாம்.

  • தமிழ் – 8 பேர்
  • ஆங்கிலம் – 415 பேர்
  • கணிதம் – 20,691 பேர்
  • அறிவியல் – 5,104 பேர்
  • சமூக அறிவியல் – 4,428 பேர்

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!