தமிழகத்தில் நாளை (பிப்.25) கடைகள் அடைப்பு – விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம்!

0
தமிழகத்தில் நாளை (பிப்.25) கடைகள் அடைப்பு - விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம்!
தமிழகத்தில் நாளை (பிப்.25) கடைகள் அடைப்பு - விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம்!
தமிழகத்தில் நாளை (பிப்.25) கடைகள் அடைப்பு – விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம்!

தமிழகத்தில் கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கூலி உயர்வு விஷயத்தில் தீர்வு கிடைக்காததால், நாளை (பிப்.25) கடையடைப்பு நடத்த சோமனூர் விசைத்தறி உரிமையாளர்கள் முடிவு செய்து உள்ளனர்.

நாளை கடைகள் அடைப்பு :

தமிழகத்தில் கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குகிறது. இந்த மாவட்டங்களில் விசைத்தறிகள் அதிகம் செயல்பட்டு வருகின்றன. வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு தொழில் நகரமாக இந்த மாவட்டங்கள் உள்ளன. அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு துணிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த துணிகளுக்கு இடத்திற்கு ஏற்ப விலை அதிகப்படுத்தி விற்கப்பட்டு வருகிறது, இருப்பினும் தொழிலாளர்கள், உரிமையாளர்களுக்கு சரியான கூலி வந்து சேருவது இல்லை என்று புகார் எழுந்து உள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை – பெற்றோர்கள் கோரிக்கை!

இந்த புகார் குறித்து தொழிலாளர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனால் கடந்த ஜனவரி 9ஆம் தேதி முதல் திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். அதன் பின்பு தமிழக அமைச்சர்கள் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதன் காரணமாக பல்லடம் உள்ளிட்ட நான்கு சங்கங்கள் தங்களுடைய போராட்டத்தை வாபஸ் வாங்கினார். இருப்பினும் சோமனூர் உள்ளிட்ட ஐந்து சங்கங்கள்ஒப்பந்த வடிவில் கூலி உயர்வை அமல்படுத்த வேண்டும் என்று தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

EPFO பயனர்கள் கவனத்திற்கு – ஆயுள் சான்றிதழின் செல்லுபடியாகும் தன்மை, காலக்கெடு பற்றிய விவரங்கள்!

இதற்கிடையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளன்று 22ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை நடத்த திட்டமிட்டு, போராட்டத்தை ஒத்திவைத்தனர். இருப்பினும் நேற்று முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்த சூழலில் சோமனூர் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பழனிசாமி,எங்களுடைய போராட்டம் தமிழக அரசை ஈர்க்க வேண்டும்,அதற்காக பதுவம்பள்ளி, கருமத்தம்பட்டி, தெக்கலூர், அவிநாசி, சாமளாபுரம், காரணம்பேட்டை, பருவாய் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (பிப் 25) கடையடைப்பு நடத்தப்படும். இதற்கு வியாபாரிகள், வணிகர்கள், வேன் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் உள்ளிட்டோர் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!