தமிழகத்தில் தீவிரம் அடையும் கொரோனா – அடுத்தடுத்து அதிர்ச்சி தரும் மரணங்கள்..!

0
தமிழகத்தில் தீவிரம் அடையும் கொரோனா – அடுத்தடுத்து அதிர்ச்சி தரும் மரணங்கள்..!
தமிழகத்தில் தீவிரம் அடையும் கொரோனா – அடுத்தடுத்து அதிர்ச்சி தரும் மரணங்கள்..!

தமிழகத்தில் தீவிரம் அடையும் கொரோனா – அடுத்தடுத்து அதிர்ச்சி தரும் மரணங்கள்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடைசியாக நிகழ்ந்த மூன்று மரணங்களும் பெரிய அளவில் அறிகுறி இல்லாமல் ஏற்பட்ட மரணங்கள் ஆகும். திடீர் என்று பலியானதால் இசசம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் தீவிரம் அடையும் கொரோனா..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

உலகளவில் 14 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு, 82 ஆயிரத்தை தாண்டிய உயிர் பலி – இந்தியாவின் நிலைமை என்ன..?

தமிழகத்தில் அடுத்தடுத்து மூன்று மரணங்கள் அறிகுறி இல்லாமல் கொரோனா தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதிலும் இவர்களுக்கு கடைசி இரண்டு மணி நேரத்தில் கொரோனா தீவிரம் அடைந்து இவர்கள் பலியாகி உள்ளனர். இது தொடர்பாக தற்போது பீலா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார்

பீலா ராஜேஷ் பேட்டி..!

கொரோனா அறிகுறி உள்ள எல்லோரையும் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறோம். அறிகுறி இல்லாதவர்களை வீட்டில் வைத்துதான் சிகிச்சை அளித்து வருகிறோம். சென்னையை சேர்ந்த பெண்ணுக்கு வயது 65 இவர் நேற்று ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவர் மருத்துவமனைக்கு வந்து வெறும் ஒன்றரை மணி நேரத்தில் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு ஏற்கனவே இதயத்தில் பிரச்சனை, சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம் இருந்தது என்று பீலா ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார்.

INO-4800 கொரோனா தடுப்பூசி சோதனை.!

அதேபோல் தேனியில் கொரோனா காரணமாக கடந்த வாரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சில மணி நேரங்களில் பலியானார். இவருக்கு கொரோனா அறிகுறியே இல்லை. மரணத்திற்கு பின்தான் கொரோனா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. திடீர் மரணம் எப்படி ஏற்படுகிறது என்றும் இதை எப்படி தடுப்பது என்று ஆலோசனை செய்து வருகிறோம் என்று பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!