திருப்பதி தரிசனம் செல்லும் தமிழக பக்தர்களுக்கு ஷாக் அறிவிப்பு – பாதுகாப்பு ஊழியர்கள் செய்த காரியம்!

0
திருப்பதி தரிசனம் செல்லும் தமிழக பக்தர்களுக்கு ஷாக் அறிவிப்பு - பாதுகாப்பு ஊழியர்கள் செய்த காரியம்!
திருப்பதி தரிசனம் செல்லும் தமிழக பக்தர்களுக்கு ஷாக் அறிவிப்பு - பாதுகாப்பு ஊழியர்கள் செய்த காரியம்!
திருப்பதி தரிசனம் செல்லும் தமிழக பக்தர்களுக்கு ஷாக் அறிவிப்பு – பாதுகாப்பு ஊழியர்கள் செய்த காரியம்!

திருமலை திருப்பதியில் தமிழக பக்தர்கள் நடைபாதை வழியாக வாத்தியங்களுடன் சென்று உள்ளனர். ஆனால் அங்கு இருந்து பாதுகாப்பு ஊழியர்கள் அவர்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி மறுத்து விட்டனர். அதனால் அங்கு சிறிய வாக்குவாதம் ஏற்பட்டு விட்டது.

திருமலை திருப்பதி:

இந்தியாவில் உள்ள பெருமாள் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பல பண்டிகைகள் நடைபெறும். அதிலும் உலகத்தில் உள்ள கடவுள்களில் பணக்கார கடவுள் யார் என்று கேட்டால் மக்கள் இந்த திருப்பதி ஏழுமலையானை தான் சொல்வார்கள். அந்த அளவுக்கு தினந்தோறும் மக்கள் இவரை தரிசனம் செய்து தங்களின் காணிக்கைகளையும் செலுத்தி வருகின்றனர்.

PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – EPFO இருப்புத்தொகையை தெரிந்து கொள்வது எப்படி? முழு விவரங்களுடன்!

இந்தியாவில் படையெடுத்து வந்த கொரோனா தொற்றின் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறி இருந்தனர். ஆனால் ஒரு கால கட்டத்திற்கு பின்னர் செயல்பட்டு வந்த ஊரடங்கில் நிறைய தளர்வுகளை தெலுங்கானா மாநிலம் கொண்டு வந்தது. அதனை தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானனும் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கு ஆன்லைனில் டிக்கெட்களை விநியோகம் செய்து வந்தனர். ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்கள் விற்று வருகிறது. ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய் 300 எனவும் தெரிவித்து இருந்தனர். இது தவிர இலவச டிக்கெட்டுகளும் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நேற்று மட்டுமே திருப்பதியில் 76,426 பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளனர். 31.574 பேர் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர். ரூ.4.62 கோடி உண்டியல் வசூலாகி உள்ளது.

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பணிகள் தீவிரம்!

இந்த நிலையில் திருமலைக்கு பக்தர்கள் ஒரு சிலர் நடை பாதை வழியாக சென்று வைகுண்டம் அறைகளில் தங்கி ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். அதனை தொடர்ந்து நேற்று தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடிய படி வாத்தியங்களுடன் திருப்பதி அலிபிரி நடைபாதை பகுதியில் திருமலைக்கு சென்று உள்ளனர். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி திருமலைக்கு வாத்தியங்களுடன் செல்லக் கூடாது என்று கோவிலுக்கு செல்ல அனுமதி மறுத்து விட்டனர். அதனால் பக்தர்களுக்கும் , ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஆகிவிட்டது. ஆனாலும் அவர்களை பாதுகாப்பு ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. அதன் பின்னர் விஷயம் அறிந்து அங்கு வந்த சித்தூர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகி பானுபிரகாவ் ரெட்டி அதிகாரிகளிடம் பேசியுள்ளார். இதையடுத்து தமிழக பக்தர்கள் திருமலைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!