PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – EPFO இருப்புத்தொகையை தெரிந்து கொள்வது எப்படி? முழு விவரங்களுடன்!

0
PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - EPFO இருப்புத்தொகையை தெரிந்து கொள்வது எப்படி? முழு விவரங்களுடன்!
PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - EPFO இருப்புத்தொகையை தெரிந்து கொள்வது எப்படி? முழு விவரங்களுடன்!
PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – EPFO இருப்புத்தொகையை தெரிந்து கொள்வது எப்படி? முழு விவரங்களுடன்!

EPFO ன் இணையதள முகவரி, யுனிஃபைட் போர்டல், குறுஞ்செய்தி, மிஸ்டு கால் மற்றும் UMANG app மூலமாக எப்படி பிஎஃப் கணக்கில் உள்ள இருப்பு தொகை அறிந்து கொள்ளலாம் என்பதற்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

PF இருப்புத்தொகை

பிஎஃப் கணக்கு என்பது அரசாங்கத்தின் கீழ் செயல்படும் வருங்கால வைப்பு நிதி திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலமாக நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஊழியர்கள் ஓய்வூதிய நிதியை பெற்று வருகின்றனர். இவர்கள் வாங்கும் சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் அல்லது அதற்கு சமமான தொகையை நிறுவனத்தின் கணக்கிற்கு செலுத்துவார்கள். இந்த தொகைக்கு வட்டி விகிதமும் வரிச்சலுகையும் கொடுக்கப்படும். அவ்வப்போது இந்த பிஎஃப் கணக்கில் மாற்றங்கள் அறிவிக்கப்படும். தற்போது எந்தெந்த முறையின் மூலமாக பிஎஃப் இருப்பு தொகையை கண்காணிப்பது என்பது குறித்தான தகவல்களை கீழே விளக்கமாக பார்க்கலாம்.

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பணிகள் தீவிரம்!

முதலில் EPFO ன் இணையதள முகவரியின் மூலமாகவும் பிஎஃப் தொகையை கணக்கிடலாம். முதலில் ஊழியர்களுக்கான பிரிவின் கீழ் உள்ள உறுப்பினர் பாஸ்புக் என்கிற பகுதியை கிளிக் செய்து அதில் UAN மற்றும் கடவுச்சொல்லை பதிவு செய்து உள்ளே நுழையவும். அதில் பணியாளர் மற்றும் முதலாளியின் பங்களிப்பின் முறிவு தொடக்க மற்றும் நிறைவு நிலுவைத்தொகையுடன் பிஎஃப் தொகை காட்டப்படும். பின்பு பிஎப் கணக்கில் இருப்புத் தொகையை காண உறுப்பினர் அறிய கிளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம். தற்போது எப்படி யுனிஃபைட் போர்டல் மூலமாக பிஎஃப் இருப்புத் தொகையை காணலாம் என்பதை பார்க்கலாம். முதலில் யுனிஃபைட் போர்டலுக்குள் நுழைந்து UAN மற்றும் கடவுச்சொல்லை பதிவு செய்து பிஎஃப் பாஸ்புக்கை திறக்கவும். வெவ்வேறு நிதியாண்டுக்கான பிஎஃப் பங்களிப்பை இதன் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எச்சரிக்கை!

தற்போது எப்படி குறுஞ்செய்தியின் மூலமாக பிஎஃப் இருப்புத் தொகையை காணலாம் என்பதை பார்க்கலாம். முதலில் 7738299899 என்ற எண்ணுக்கு EPFOHO UAN ENG என SMS அனுப்ப வேண்டும். பின்பு ஒருவர் PF பங்களிப்பையும், KYC விவரங்களுக்கு குறிப்பிட்ட உறுப்பினரின் இருப்பு விவரங்களையும் பெறுவார். மிஸ்டு கால் மூலமாக பிஎஃப் இருப்புத் தொகையை காண EPFO வழங்கும் மிஸ்டு கால் சேவையை பயன்படுத்த வேண்டும். அதாவது 011-22901406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இரண்டு ரிங்களுக்குப் பிறகு அழைப்பு துண்டிக்கப்பட்டு PF இருப்பு தொகை காண்பிக்கப்படும். UMANG செயலி மூலமாகவும் PF இருப்பு தொகை காணலாம். PF இருப்பு, உரிமைகோரல் நிலை, வாடிக்கையாளரின் (KYC) நிலையை அறிந்து UMANG செயலியில் இருந்து EPF விவரங்களைப் பெற்று கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!