Axis வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் அறிவிப்பு – வட்டி விகிதம் அதிகரிப்பு!

0
Axis வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் அறிவிப்பு - வட்டி விகிதம் அதிகரிப்பு!
Axis வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் அறிவிப்பு - வட்டி விகிதம் அதிகரிப்பு!
Axis வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் அறிவிப்பு – வட்டி விகிதம் அதிகரிப்பு!

Axis வங்கியின் MCLR வட்டி விகிதமானது 5 அடிப்படை புள்ளிகள் வரை அதிகரித்துள்ள நிலையில் கடன்களுக்கான மாத தவணை தொகையும் அதிகரிக்க கூடும் என வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Axis வங்கி:

SBI மற்றும் Bank of Baroda முதலான வங்கிகள் MCLR விகிதத்தினை அதிகரித்ததை தொடர்ந்து தற்போது Axis வங்கியும் MCLR விகிதத்தினை அதிகரித்துள்ளது. அதாவது Axis வங்கி 5 அடிப்படை புள்ளிகள் வரை MCLR விகிதத்தினை உயர்த்தியுள்ளது. இந்த வட்டி விகிதமானது நேற்றில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. MCLR வட்டி விகிதம் அதிகரித்துள்ளதால் கடன்களுக்கான மாத தவணை தொகையும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக பைக் வாங்க திட்டமிடுபவர்கள் கவனத்திற்கு – கடன் வழங்கும் வங்கிகளின் பட்டியல்!

தற்போது மீடியம் டெர்மில் எம்சிஎல்ஆர் விகிதமானது 7.15%, 7.15% 7.25% மற்றும் 7.30% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கான MCLR விகிதமானது 7.35% ஆகவும், இரண்டு வருடத்திற்கான MCLR விகிதமானது 7.45% ஆகவும், 3 வருடத்திற்கான MCLR விகிதமானது 7.55% ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், Effective base rate விகிதமானது 8.45% ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே Axis வங்கி கடந்த செப்டம்பர் மாதம் தான் 5 அடிப்படை புள்ளிகள் வரை MCLR விகிதத்தினை உயர்த்திய நிலையில் தற்போது மீண்டும் 5 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது.

முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அமல்? நிர்வாகம் ஆலோசனை!

ஆக்ஸிஸ் வங்கியின் பங்கு விலையானது என்எஸ்இ-யில் 1.63% வரை அதிகரித்து 812 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் உச்ச விலை 814.25 ரூபாயாகவும், குறைந்தபட்ச விலை 801.40 ரூபாயாகவும் உள்ளது. மேலும், இதன் 52 வார உச்ச விலை 866.90 ரூபாயாகவும், 52 வார குறைந்தபட்ச விலை 631 ரூபாயாகவும் உள்ளது. இதே பிஎஸ்இ-யில் 1.41% அதிகரித்து 810.45 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் உச்ச விலை 814.30 ரூபாயாகவும், குறைந்தபட்ச விலை 801.25 ரூபாயாகவும் உள்ளது. மேலும், 52 வார உச்ச விலை 866.60 ரூபாயாகவும், 52 வார குறைந்தபட்ச விலை 631.10 ரூபாயாகவும் உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!