துர்காவிற்கு வெண்பாவை திருமணம் செய்துவைக்க நினைக்கும் ஷர்மிளா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

0
துர்காவிற்கு வெண்பாவை திருமணம் செய்துவைக்க நினைக்கும் ஷர்மிளா - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
துர்காவிற்கு வெண்பாவை திருமணம் செய்துவைக்க நினைக்கும் ஷர்மிளா - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
துர்காவிற்கு வெண்பாவை திருமணம் செய்துவைக்க நினைக்கும் ஷர்மிளா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

வெண்பாவிற்கு எப்படியாவது வேறு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என நினைக்கும் ஷர்மிளா தற்போது வெண்பாவை துர்காவிற்கு திருமணம் செய்து வைக்கலாம் என முடிவு எடுக்கும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மனதில் நல்ல ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது. அந்த வகையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது புதிதாக வெண்பாவின் அம்மாவாக ஷர்மிளா என்ற புதிய கதாபாத்திரம் அறிமுகமாகியுள்ளார். வெண்பாவின் அம்மா வெண்பாவை விட படு வில்லியாக இருப்பார் என எதிர்பார்த்த சமயத்தில் வெண்பாவிற்கு ஷர்மிளா வில்லியாக இருந்து வருகிறார்.

வளைகாப்பு விழாவில் நகைக்கடை பொம்மையாக ஜொலித்த ஆலியா – வைரலாகும் வீடியோ!

அதாவது பாரதியை ஒரு வருடத்திற்குள் திருமணம் செய்துவிட்டு அமெரிக்கா வந்து விடுவேன் எனக் கூறி விட்டு தானே இங்கு வந்தாய். ஆனால் நீ பாரதியை தேடி வந்து கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் ஆகியும் பாரதி பின்னாடி நீ சுற்றிக்கொண்டு மட்டுமே இருக்கிறாய். பாரதி உன்னை காதலிக்கவில்லை. சொல்லப்போனால் பாரதி உன்னை கண்டு கொள்வதே இல்லை. நீ எப்படி பாரதியின் மனதை மாற்றி பாரதியை திருமணம் செய்து கொள்ள போகிறாய். இது எக்காலத்திலும் நடக்கவே நடக்காது. இதனால் நான் இப்போது உனக்கு மாப்பிள்ளை பார்க்க போகிறேன். நான் சொல்லும் மாப்பிள்ளையை நீ திருமணம் செய்து கொள் எனக் கூறுகிறார்.

திடீரென மயங்கிய முல்லை – கர்ப்பமாக இருக்குமோ என சந்தேகத்தில் கதிர்! சீரியலில் அடுத்த திருப்பம்!

இதற்குப் பிறகுதான் வெண்பா கடத்தி வைத்திருந்த துர்கா வெண்பாவிடம் இருந்து தப்பித்து வந்து சர்மிளாவை சந்திக்கிறார். அதாவது நானும் வெண்பாவை போல் டாக்டருக்கு தான் படித்திருக்கிறேன். வெண்பாவை நீங்கள் எனக்கு திருமணம் செய்து வைத்தால் அவரை நான் நன்றாக பார்த்துக் கொள்வேன் எனக் கூறி சர்மிளாவின் மனதை மாற்ற நினைக்கிறார். ஷர்மிளா உடனே துர்காவை வெண்பாவிற்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுக்கிறார். துர்காவை வெண்பா திருமணம் செய்துகொள்ளப் போகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!