வளைகாப்பு விழாவில் நகைக்கடை பொம்மையாக ஜொலித்த ஆலியா – வைரலாகும் வீடியோ!

0
வளைகாப்பு விழாவில் நகைக்கடை பொம்மையாக ஜொலித்த ஆலியா - வைரலாகும் வீடியோ!
வளைகாப்பு விழாவில் நகைக்கடை பொம்மையாக ஜொலித்த ஆலியா - வைரலாகும் வீடியோ!
வளைகாப்பு விழாவில் நகைக்கடை பொம்மையாக ஜொலித்த ஆலியா – வைரலாகும் வீடியோ!

ஐலா பாப்பாவின் பிறந்த நாளான மார்ச் 20 அன்று தான் ஆலியாவிற்கு வளைகாப்பை சஞ்சீவ் மிகவும் பிரமாண்டமாக நடத்தினார். வளைகாப்பு விழாவின்போது ஆலியா பல நகைகளை அணிந்துகொண்டு திருமண பெண்ணாகவே மாறி இருக்கும்படியான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஆலியாவின் வளைகாப்பு:

தற்போதெல்லாம் ஒரே சீரியலில் அறிமுகமாகி பார்த்து, பேசி, பழகி, காதலித்து திருமணமும் செய்து கொள்கிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி தொடரின் மூலமாக அறிமுகமானவர்கள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். இத்தொடரில் ஒன்றாக இணைந்து நடித்ததன் மூலமாக காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர். காதலிக்கும்போது ஆலியா மீது சஞ்சீவ்விற்கு எவ்வளவு காதல் இருந்ததோ அதைவிட பல மடங்கு தற்போதும் இருந்து வருகிறது.

திடீரென மயங்கிய முல்லை – கர்ப்பமாக இருக்குமோ என சந்தேகத்தில் கதிர்! சீரியலில் அடுத்த திருப்பம்!

ஆலியாவிற்கு ஐலா என்கிற அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது. ஐலா பாப்பா பிறந்த பிறகு ஆலியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜாராணி சீசன் 2வில் நடிக்க ஒப்பந்தமானார். சஞ்சீவ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் கயல் தொடரில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இருவரும் தொலைக்காட்சி சீரியல்களில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது தங்களது காதலை வளர்க்க தனியாக நேரம் ஒதுக்கி வருகின்றனர். ராஜா ராணி தொடரில் நடித்துக் கொண்டிருந்தபோதே ஆலியா இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார்.

கோவத்தில் வெண்பா மீது தண்ணீர் ஊற்றிய ஷர்மிளா – “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த எபிசோட்!

கர்ப்பமாக இருக்கும் நிலையில் ஆலியா சீரியலில் இருந்து விலகிக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் தொடர்ந்து ராஜா ராணி தொடரில் நடித்து வந்தார். பிரசவத்திற்கு கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு முன்பாகவே ராஜா ராணி தொடரில் இருந்து விலகினார். ஆலியாவின் முதல் வளைகாப்பை விட இரண்டாவது வளைகாப்பை மிக பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்கிற பேரில் ஐலா பாப்பாவின் பிறந்த நாளான மார்ச் 20 அன்று தான் கோலாகலமாக ஆலியாவின் வளைகாப்பை சஞ்சீவ் நடத்தினார். ஐலா பாப்பா மற்றும் ஆலியா இருவருக்குமே பல லட்சங்கள் செலவு செய்து ஜொலிஜொலிக்கும் வண்ணம் ஆடைகள் வடிவமைக்கப்பட்டன. அனைத்து நகைகளையும் அணிந்துகொண்டு ஆலியா வளைகாப்பு விழாவில் கல்யாண பெண்ணாகவே ஜொலித்துக் கொண்டிருந்தார் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here