“பாண்டியன் ஸ்டோர்ஸ்” பழைய ஐஸ்வர்யாவை காதலிக்கும் கண்ணன்? ரசிகர்கள் சரமாரி கேள்வி!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" பழைய ஐஸ்வர்யாவை காதலிக்கும் கண்ணன்? ரசிகர்கள் சரமாரி கேள்வி!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” பழைய ஐஸ்வர்யாவை காதலிக்கும் கண்ணன்? ரசிகர்கள் சரமாரி கேள்வி!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைசி தம்பி கண்ணனிற்கு ஜோடியாக நடித்த விஜே தீபிகா, சீரியலில் இருந்து விலகினாலும் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்த சரவண விக்ரமுடன் நட்பாக பழகி வருகிறார். இருவரும் இணைந்து வெளியிட்ட புகைப்படத்தில் ரசிகர்கள் அனைவரும் ஒரே கேள்வியை பலமுறை கேட்டுள்ளனர்.

விஜே தீபிகா:

விஜய் டிவி சீரியல் என்றாலே தனி சிறப்பு தான், அதிலும் ப்ரைம் டைம் சீரியல்கள் எல்லாமே TRPயில் இடம் பிடிக்க போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது. அந்த வகையில் பாசமான அண்ணன் தம்பிகளை கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்களிடம் நல்ல புகழில் இருக்கிறது. அந்த சீரியலில் கடைசி தம்பி கண்ணனை வைத்து தான் பெரிய திருப்பமே ஏற்பட்டுள்ளது. கண்ணன் காதலித்த பெண்ணை திருமணம் செய்ததால் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்படுகிறார். கண்ணனின் ஜோடியாக முதலில் விஜே தீபிகா நடித்து வந்தார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தனம் சுஜிதா யார் தெரியுமா? நிஜ வாழ்க்கை பயணம்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

அதன் பின் சில காரணங்களால் அவர் சீரியலில் இருந்து விலக்கப்பட்டார். சீரியலில் ஒன்றாக நடிக்கும் போது இருவரும் நல்ல ஜோடி என பேசப்பட்டது. அதன் பின் கண்ணனிற்கு ஜோடியாக சாய் காயத்ரி நடித்து வருகிறார். ஆனால் விஜே தீபிகா தான் சரியான ஜோடி அவர் மீண்டும் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அவர் நடிக்கவில்லை. இந்நிலையில் அவர் கண்ணனாக நடிக்கும் சரவண விக்ரமுடன் இணைந்து யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

‘பாக்கியலட்சுமி’ ஆர்யன் தாலி கட்ட, கண்ணீருடன் ஏற்றுக் கொண்ட ‘செம்பருத்தி’ ஷபானா – திருமண வீடியோ!

அதில் இருவரையும் ஒன்றாக பார்த்த பலர் காதலிக்கிறீர்களா என தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இருவரும் நல்ல நண்பர்கள் என பலமுறை சொல்லியும் கேள்வி ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் இருவரும் ஒரே கலர் ட்ரெஸ்ஸில் கோவையில் உள்ள ஈஷா மையத்திற்குசென்றிருக்கின்றனர். அதை பார்த்த ரசிகர்கள் பலர் ஒரே கலர் ட்ரெஸ் நீங்க காதலிக்கிறீர்களா என பல கமெண்ட்களை செய்திருக்கின்றனர். பேசுறவங்க பேசிட்டு தான் இருப்பார்கள் என விஜே தீபிகா மற்றும் சரவண விக்ரம் நட்புடன் ஒளிவு மறைவு இல்லாமல் பழகி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!