‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தனம் சுஜிதா யார் தெரியுமா? நிஜ வாழ்க்கை பயணம்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் தனம் சுஜிதா யார் தெரியுமா? நிஜ வாழ்க்கை பயணம்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் தனம் சுஜிதா யார் தெரியுமா? நிஜ வாழ்க்கை பயணம்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தனம் சுஜிதா யார் தெரியுமா? நிஜ வாழ்க்கை பயணம்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் அண்ணியாக நம் அனைவர் மனதிலும் தனி இடம் பிடித்த சுஜிதா, தனது வாழ்க்கையில் கடந்து வந்த பயணம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் குறித்த தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

சுஜிதாவின் பயணம்:

சின்னத்திரை நட்சத்திரங்கள் தாங்கள் நடிக்கும் தொடரின் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிப்பதாக பெயரெடுப்பது என்பது பெரிய விஷயம். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் அண்ணியாக, அந்த குடும்பத்தின் ஆணிவேராக நடித்திருப்பவர் நடிகை சுஜிதா. சுஜிதா சின்னத்திரைக்கு புதியவர் இல்லை என்றாலும், தான் இதுவரை நடித்த சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தான் தனக்கு மிகவும் பிடித்தது என்று கூறியுள்ளார். அந்த அளவிற்கு சீரியலில் கதாபாத்திரத்தோடு ஒன்றி நடிக்க கூடியவர் சுஜிதா.

‘பாக்கியலட்சுமி’ ஆர்யன் தாலி கட்ட, கண்ணீருடன் ஏற்றுக் கொண்ட ‘செம்பருத்தி’ ஷபானா – திருமண வீடியோ!

சுஜிதா கேரளாவின் திருவனந்தபுரத்தில் 13 ஜூலை 1983 ம் ஆண்டு பிறந்துள்ளார். அதன்பிறகு, பல ஆண்டுகள் பொள்ளாச்சியில் இருந்துள்ளார். தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். சுஜிதா பிறந்து 41 நாட்கள் குழந்தையாகவே நடிகை கே.ஆர் விஜயா நடித்த படத்தில் அவரின் பேத்தியாக நடித்துள்ளார். அதனை தொடர்ந்து பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தில் கைக்குழந்தையாக நடித்துள்ளார். இது போலவே, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிகளிலும் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சுஜிதா நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக நடித்ததற்காக நந்தி விருதினையும் சுஜிதா பெற்றுள்ளார்.

“பாரதி கண்ணம்மா” பரீனாவை வயிற்றுக்குள் இருந்து உதைக்கும் குழந்தை – வெளியான வீடியோ!

அது தவிர பல மொழிகளிலும்சீரியல்களில் நடித்துள்ளார். இதற்காகவும் பல விருதுகளை சுஜிதா பெற்றுள்ளார். சுஜிதாவின் அப்பா மணி சுஜிதாவின் சிறு வயதிலேயே இறந்து விட்டார். இவரது அம்மா ராதா. சுஜிதாவிற்கு சூர்ய கிரண் என்ற ஒரு அண்ணனும், சுனிதா என்ற ஒரு தங்கையும் உள்ளார். சுஜிதாவின் அண்ணன் அவர்களும் ஒரு நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் சமுத்திரம் படத்தில் நடித்துள்ள நடிகை காவேரி என்பவரை திருமணம் செய்துள்ளார். சுஜிதாவின் கணவர் தனுஷ் தனது விளம்பரம் தயாரிக்கும் நிறுவனத்தில் தலைவராக உள்ளார். சுஜிதாவிற்கு தன்வின் என்ற ஒரு மகனும் உள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!