பெண் குழந்தைகள், பெற்றோர்கள் கவனத்திற்கு – சென்னை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

0
பெண் குழந்தைகள், பெற்றோர்கள் கவனத்திற்கு - சென்னை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
பெண் குழந்தைகள், பெற்றோர்கள் கவனத்திற்கு - சென்னை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
பெண் குழந்தைகள், பெற்றோர்கள் கவனத்திற்கு – சென்னை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

சமீப காலமாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்த புகார்கள் அதிக அளவில் பதிவாகி வருகின்ற சூழலில் சென்னை ஆட்சியர் ஜெ.விஜய ராணி அவர்கள் குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் ஒரு அன்பு வேண்டுகோளை வெளியிட்டுள்ளார்.

ஆட்சியரின் வேண்டுகோள்:

பெண்கள் தங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சமூக கட்டுப்பாடுகளை உடைத்து தங்கள் முன்னேற்றத்தை நோக்கி போராடுவதற்காக வெளியில் வரும் சூழ்நிலைகளில் அவர்களை தொடரும் பாலியல் வன்முறைகள் காரணமாக நமது சூழல் இன்னும் பின்னோக்கி தான் செல்கிறது. சமீப காலமாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் குறித்த புகார்கள் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கான சமூக பார்வை விரிவடைந்து வரும் சூழ்நிலையிலும் இது போன்ற அநியாயங்கள் இன்னும் நடந்து கொண்டு தான் உள்ளது. அதிலும், ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு பெண்கள் கல்வி கற்க செல்லும் இடங்களில் இது போல் நடக்கும் அவலங்கள் அதிகரித்து வருவது ஏற்றுக் கொள்ள முடியாததாக உள்ளது. இதனால் மனம் உடைந்த குழந்தைகள் தற்கொலை எண்ணத்திற்கு சென்று தங்கள் வாழ்வை முடித்துக் கொள்கின்றனர்.

தமிழகத்தில் டிச.3ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

பெண் குழந்தைகளுக்கான பாலியல் வன்முறைகள் குறித்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜய ராணி அவர்கள் சென்னை மாவட்டத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் அன்பு வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாலியல் வன்முறையை மேற்கொள்ளும் நபர் தான் மிகவும் மோசமான மனநிலை கொண்ட நபர். அவர் தான் தண்டனை பெறக்கூடியவர், குற்றவாளியாக உள்ளவர். இதனால் பாதிக்கப்படும் குழந்தைகள் எந்த வித தவறும் செய்யாதவர்கள். அவர்கள் எந்த குற்ற உணர்ச்சியும் அடைய தேவையில்லை. பாலியல் வன்முறைகளால் நீங்களோ அல்லது உங்கள் தோழிகளோ பாதிக்கப்பட்டால் அதனை உங்கள் நம்பிக்கைக்கு உரிய நபர்களிடம் அறிவிக்க வேண்டும். உங்களுக்கு வேண்டியது அனைத்தும் சரியான ஆலோசனை மற்றும் முதலுதவி தான்.

சபரிமலை தரிசனம் செல்வோர்க்கு முக்கிய அறிவிப்பு – கொரோனா சோதனை தேவையில்லை!

நீங்கள் அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். இது குறித்த உதவு உங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட நிர்வாகத்தின் உதவியை நீங்கள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 1098 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம். உங்களின் தகவல்கள் அனைத்தும் ரகசியமாக பாதுகாக்கப்படும். நீங்கள் 9940631098 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு HI என்ற ஒரு செய்தியை மட்டும் அனுப்பினால் போதும் நாங்களே உங்களிடம் தொடர்பு கொண்டு உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம். உங்களுக்கு உதவிகளை நானும், குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு சார்ந்த அலுவலர்களும் விரைந்து வந்து உதவ தயாராக உள்ளோம். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். நாம் அனைவரும் ஒன்றாக செயல்பட்டு சென்னை மாவட்டத்தை குழந்தைகளுக்கான பாதுகாப்பு மிகுந்த மாவட்டமாக மாற்ற உறுதி எடுப்போம் என்று மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!