சபரிமலை தரிசனம் செல்வோர்க்கு முக்கிய அறிவிப்பு – கொரோனா சோதனை தேவையில்லை!

0
சபரிமலை தரிசனம் செல்வோர்க்கு முக்கிய அறிவிப்பு - கொரோனா சோதனை தேவையில்லை!
சபரிமலை தரிசனம் செல்வோர்க்கு முக்கிய அறிவிப்பு - கொரோனா சோதனை தேவையில்லை!
சபரிமலை தரிசனம் செல்வோர்க்கு முக்கிய அறிவிப்பு – கொரோனா சோதனை தேவையில்லை!

தற்போது கார்த்திகை மாதம் என்பதால் கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தற்போது நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் குழந்தைகளுக்கான ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய தேவை இல்லை என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில்

தற்போது கார்த்திகை மாதம் என்பதால் கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்கு ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிகின்றன. மேலும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடைப்பிடித்து வருகின்றன. சபரி மலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை முடிவில் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் ஆகியவற்றை கண்டிப்பான முறையில் வைத்திருக்க வேண்டும் எனவும் கோவில் தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

Post Office சூப்பர் சேமிப்பு திட்டம் – மாதம் ரூ.100 முதலீடு ரூ.24 லட்சம் வரை ரிட்டன்ஸ்! முழு விபரம் இதோ!

தற்போது பருவமழை காலம் என்பதால் தொடர்ந்து மழை பெய்து அங்குள்ள பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டார்கள். அதன் பின் பம்பை ஆற்றில் நீராடவும் ஓய்வு எடுக்கவும் அனுமதியளித்தனர். அதனை தொடர்ந்து தற்போது நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் பக்தர்கள் முன் பதிவின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அது மட்டுமின்றி 5 ஆயிரம் பக்தர்கள் உடனடியாக முன் பதிவின் அடிப்படையில் கூடுதலாக அனுமதிக்கப்படுகிறார்கள்.

தமிழகத்தில் டிச.10ம் தேதி வரை ‘இதற்கு’ தடை – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

அதே போல் பக்தர்கள் கூடாரங்களை அமைத்து தங்கவும் அனுமதி அளிக்கப்படுகிறார்கள். பம்பையில் இருந்து ஒரு வழிப்பாதையில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு சென்று வருகிறார்கள். பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் நீலிமலை வழியாகவும் பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் பக்தர்கள் தங்களின் குழந்தைகளுடன் வருகின்றன. அதனால் கோவில் நிர்வாகம் குழந்தைகளுக்கான ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை தேவையில்லை என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் கொரோனா பரிசோதனை தேவையில்லை என்றும் அறிவித்தது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியாக தங்களின் குழந்தைகளுடன் சாமி தரிசனம் செய்ய வருகின்றன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here