‘பாக்கியலட்சுமி’ ஆர்யன் தாலி கட்ட, கண்ணீருடன் ஏற்றுக் கொண்ட ‘செம்பருத்தி’ ஷபானா – திருமண வீடியோ!

0
'பாக்கியலட்சுமி' ஆர்யன் தாலி கட்ட, கண்ணீருடன் ஏற்றுக் கொண்ட 'செம்பருத்தி' ஷபானா - திருமண வீடியோ!
'பாக்கியலட்சுமி' ஆர்யன் தாலி கட்ட, கண்ணீருடன் ஏற்றுக் கொண்ட 'செம்பருத்தி' ஷபானா - திருமண வீடியோ!
‘பாக்கியலட்சுமி’ ஆர்யன் தாலி கட்ட, கண்ணீருடன் ஏற்றுக் கொண்ட ‘செம்பருத்தி’ ஷபானா – திருமண வீடியோ!

ஜீ தமிழ் “பாக்கியலட்சுமி” சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்யன் “செம்பருத்தி” சீரியல் புகழ் ஷபானாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தாலி கட்டும் வீடியோவை ஷபானா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆர்யன் ஷபானா:

தமிழ் தொலைக்காட்சியில் டாப் சீரியல்களில் ஒன்றாக செம்பருத்தி சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரம் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஷபானா. அவரும் பாக்யலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆர்யன் என்பவரும் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது. ஆனால் இருவரும் இது குறித்து வெளியில் எதுவும் சொல்லாமல் மவுனம் காத்து வந்தனர். ஆனால் ஷபானா தனது பிறந்தநாள் அன்று ஆர்யனை காதலிப்பதாகவும், அவர்களுக்கு நிச்சயம் முடிந்துள்ளதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுருந்தார்.

“பாரதி கண்ணம்மா” பரீனாவை வயிற்றுக்குள் இருந்து உதைக்கும் குழந்தை – வெளியான வீடியோ!

மேலும் திருமணம் நடந்தால் உங்களிடம் சொல்லாமல் நடக்காது என வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தால், இந்நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஷபானா ஆர்யன் திருமணம் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. அதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உணரவினர்கள் கலந்து கொண்டனர். வேறு மத திருமணம் என்றாலும் கேரளா முறைப்படி ஆர்யன் ஷபானா கழுத்தில் தாலி கட்டினார். அந்த அழகான காதல் ஜோடிக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா வெளியிட்ட புரொடக்க்ஷன் சாப்பாடு வீடியோ – ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

இந்நிலையில் திருமணம் முடிந்து இருவரும் பாண்டிசேரிக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அது குறித்த புகைப்படங்கள் வெளியான நிலையில், ஷபானா தனக்கு ஆர்யன் தாலி கட்டும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். ஆர்யன் தாலி கட்ட ஷபானா கண்ணீருடன் அதை ஏற்றுக் கொள்கிறார். பின் ஷபானா காதில் ஆர்யன் எதோ சொல்ல அதை சிரித்துக் கொண்டே ஷபானா கேட்கிறார். இந்த வீடியோ தற்போது ஷபானா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!