
‘பிக்பாஸ்’ சீசன் 5 வைல்ட் கார்டு என்ட்ரியாகும் நடிகர் விஜயின் நண்பர் சஞ்சீவ்? இணையத்தில் கசிந்த தகவல்!
விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி துவங்கி கிட்டத்தட்ட 40 நாட்கள் கடந்திருக்கும் நிலையில் வைல்ட் கார்டு என்ட்ரி குறித்த அப்டேட்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அதில் ‘பிக்பாஸ்’ வைல்ட் கார்டு என்ட்ரியாக நடிகர் சஞ்சீவ் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வைல்ட் கார்டு
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதங்களில் நடத்தப்படும் பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ்’ இந்த ஆண்டு சற்று தாமதமாக அக்டோபர் மாதம் 3ம் தேதி தொடங்கியது. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் துவங்கிய இந்த ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் மொத்தம் 18 பேர் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒரு திருநங்கை போட்டியாளரும் உட்படுவர். இப்படி இருக்க நிகழ்ச்சி துவங்கிய முதல் வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து திருநங்கை போட்டியாளர் நமீதா மாரிமுத்து வெளியேறினார்.
களைகட்டிய ‘செம்பருத்தி’ ஷபானா ‘பாக்கியலட்சுமி’ ஆர்யன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி – வைரலாகும் வீடியோ!
இவரை தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் நாடியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு மற்றும் கடைசியாக ஸ்ருதி என்பவர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த வகையில் இதுவரை 5 பேர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில் இன்னும் பிக்பாஸ் வீட்டுக்குள் 13 போட்டியாளர்கள் இடம்பிடித்துள்ளனர். இதில் இந்த வார நாமினேஷன் ப்ராசஸில் ராஜு, அபினய், அக்ஷரா, இமான் அண்ணாச்சி, சிபி, பாவனி, மதுமிதா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதற்கு மத்தியில் ‘பிக்பாஸ்’ சீசன் 5 போட்டிக்களம் தற்போது சூடு பிடிக்க துவங்கியுள்ளது. ஒவ்வொரு நாளும் வித்தியாசமான டாஸ்குகளுக்கு மத்தியில் போட்டியாளர்கள் போடும் சண்டடைகளுடன் இந்த சீசன் ஸ்வாரசியமாக நகர்ந்து வருகிறது. இப்போது பிக்பாஸ் சீசன் துவங்கி 40 நாட்கள் கடந்திருக்கும் நிலையில் வழக்கம் போல போட்டியில் விறுவிறுப்பை கூட்டும் வகையில் விரைவில் புதிய வைல்ட் கார்டு என்ட்ரி இருக்க போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
“பாரதி கண்ணம்மா” வெண்பா மருத்துவமனையில் அனுமதி – விரைவில் பிரசவம்! ரசிகர்கள் வாழ்த்து!
அதாவது பிக்பாஸ் சீசன் 5ன் வைல்ட் கார்டு என்ட்ரியாக நடிகை ஷாலு சம்மு, திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர் சஞ்சீவ்வின் பெயரும் சொல்லப்படுகிறது. நடிகர் சஞ்சீவ் விஜய்யின் நெருங்கிய நண்பர் ஆவார். ‘திருமதி செல்வம்’ உள்ளிட்ட பல்வேறு சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்டு என்ட்ரியாக சென்றால் எந்த மாதிரியான மாற்றங்கள் நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.