களைகட்டிய ‘செம்பருத்தி’ ஷபானா ‘பாக்கியலட்சுமி’ ஆர்யன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி – வைரலாகும் வீடியோ!

0
களைகட்டிய 'செம்பருத்தி' ஷபானா 'பாக்கியலட்சுமி' ஆர்யன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி - வைரலாகும் வீடியோ!
களைகட்டிய 'செம்பருத்தி' ஷபானா 'பாக்கியலட்சுமி' ஆர்யன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி - வைரலாகும் வீடியோ!
களைகட்டிய ‘செம்பருத்தி’ ஷபானா ‘பாக்கியலட்சுமி’ ஆர்யன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி – வைரலாகும் வீடியோ!

நேற்று காலை திருமணம் முடிந்த கையோடு நடிகை ஆர்யன் மற்றும் நடிகை ஷபானாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியானது ஆட்டம் பாட்டத்துடன் நடந்தேறி இருக்கிறது. இது தொடர்பாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வரவேற்பு நிகழ்ச்சி

சின்னத்திரை தொடர்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் ஆர்யன் மற்றும் நடிகை ஷபானா ஷாஜகான் இருவரும் நேற்று (நவ.11) திருமணம் செய்து கொண்டுள்ளனர். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடை சூழ இவர்களது காதல், திருமணத்தில் நிறைவு பெற்றுள்ளது. மிகவும் எளிமையான முறையில் நடைபெற்ற இந்த திருமணம் தான் நேற்று சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்ட ஒரு முக்கிய விஷயமாக இருந்தது.

“பாரதி கண்ணம்மா” வெண்பா மருத்துவமனையில் அனுமதி – விரைவில் பிரசவம்! ரசிகர்கள் வாழ்த்து!

திரைக்கு பின்னால் பல மாதங்களாக காதலித்து வந்த ஆர்யன் மற்றும் ஷபானா ஜோடிக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது. அதற்கு பின்பாக இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் நடைபெறும் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், நேற்று இவர்களுக்கு திடீர் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த திருமணத்தை தொடர்ந்து நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியிலும் பல்வேறு சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு புதுமண ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

சந்திரலேகாவின் திட்டத்தை தெரிந்து கொண்ட சரஸ்வதி, தமிழ் புகைப்படத்தை பார்த்த சரஸ்வதி அப்பா – இன்றைய “தமிழும் சரஸ்வதியும்” சீரியல்!

அந்த வகையில் ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் நட்சத்திரங்களான அக்னி, கதிர், ஜனனி, நக்ஷத்ரா, சைத்ரா ரெட்டி ஆகியோருடன் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகை திவ்யா கணேஷ் உட்பட பலர் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் வரவேற்பு நிகழ்ச்சியானது ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் அரங்கேறி இருக்கிறது. இது தொடர்பான மேக்கிங் புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் பல சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!