“பாரதி கண்ணம்மா” வெண்பா மருத்துவமனையில் அனுமதி – விரைவில் பிரசவம்! ரசிகர்கள் வாழ்த்து!

0
"பாரதி கண்ணம்மா" வெண்பா மருத்துவமனையில் அனுமதி - விரைவில் பிரசவம்! ரசிகர்கள் வாழ்த்து!
“பாரதி கண்ணம்மா” வெண்பா மருத்துவமனையில் அனுமதி – விரைவில் பிரசவம்! ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல் வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் பரீனாவிற்கு சில நாட்களில் குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் மருத்துவமனையில் செக்கப் செய்ய வந்திருக்கும் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

நடிகை பரீனா:

பாரதி கண்ணம்மா சீரியல் மக்களின் பேராதரவுடன் தொடர்ந்து நம்பர் 1 சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பாரதியாக நடிக்கும் அருண், கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி, வெண்பாவாக நடிக்கும் பரீனா என அனைவருக்கும் மக்கள் மத்தியில் ரசிகர் பட்டாளம் அதிகமாக உள்ளனர். இந்நிலையில் இந்த சீரியலில் வில்லி வெண்பாவாக நடிக்கும் பரீனா கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்தார்.

சந்திரலேகாவின் திட்டத்தை தெரிந்து கொண்ட சரஸ்வதி, தமிழ் புகைப்படத்தை பார்த்த சரஸ்வதி அப்பா – இன்றைய “தமிழும் சரஸ்வதியும்” சீரியல்!

அதனால் அவர் சீரியலில் இருந்து விலகுவாரா என ரசிகர்களிடம் கேள்வி எழும்பியது. ஆனால் அவர் சீரியலில் தொடர்ந்து நடித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பரீனாவிற்கு இன்னும் சில நாட்களில் குழந்தை பிறக்க இருக்கிறது. இதனால் சீரியலில் இருந்து அவரை நீக்காமல் கதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெண்பா சிறை சென்றது போல காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் பரீனா தன்னுடைய கடைசி மாத செக்கப் செய்ய மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.

அமிர்தாவிற்கு பரிசு வாங்க ஐடியா கொடுக்கும் பாக்கியா, கோபியிடம் சண்டையிடம் ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

அப்போது தனது கணவருடன் இணைந்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் வெண்பாவிற்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர். வெண்பா தனக்கு சுகப்பிரசவம் தான் ஆகும் என ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருக்கு குழந்தை பிறந்த பின்னர் தான் பாரதி கண்ணம்மா சீரியலில் எந்த மாதிரியான மாற்றங்கள் இருக்கும் என தெரியவரும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!