தமிழகத்தில் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித் திட்டம் – அரசின் முக்கிய அப்டேட்!
தமிழகத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி திட்டத்தின் கீழ் மாணவிகள் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் வரவு வைக்க முடிவு செய்யப்பட்டு அண்மையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. மேலும் இந்த திட்டத்திற்கு தற்போது ரூ.698 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரூ.1000 உதவித் திட்டம் :
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு , மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் படி, ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதி ஆயிரம் ரூபாய் மாணவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்க முடிவு செய்யப்பட்டு அரசாணை வெளியானது. மேலும் இதற்கான, விண்ணப்பங்கள் கடந்த ஜூலை 10ம் தேதி வரை பெறப்பட்டன.
TN Job “FB
Group” Join Now
இதைத் தொடர்ந்து விண்ணப்பங்களில் திருத்தம் செய்யவும் கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின்படி, ஒவ்வொரு வருடமும் சுமார் 6 லட்சம் மாணவிகள் பயன்பெறும் வகையில் நடப்பாண்டுக்கு மட்டும் ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து இந்த திட்டத்தின் கண்காணிப்பாளராக சமூக நலத்துறையின் இயக்குனர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த திட்டத்தை முறைப்படி செயல்படுத்தவும், தொடர்ந்து கண்காணிக்கவும் மாநில அளவில் தலைமைச் செயலாளர் தலைமையிலும் மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையிலும் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கதிர் கடை திறப்பு விழாவிற்கு மூர்த்தியை அழைக்கும் முருகன், வர மறுத்த மூர்த்தி – இன்றைய எபிசோட்!
இந்த குழுவில் நிதி, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முதன்மைச் செயலாளர்கள் உறுப்பினர்களாக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் மாணவிகள் கல்லூரி மேல் படிப்பை பயில்கின்றனரா என்பதை ஒவ்வொரு ஆறு மாதமும் உயர்கல்வித்துறை சார்பாக உறுதி செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.