கதிர் கடை திறப்பு விழாவிற்கு மூர்த்தியை அழைக்கும் முருகன், வர மறுத்த மூர்த்தி – இன்றைய எபிசோட்!

0
கதிர் கடை திறப்பு விழாவிற்கு மூர்த்தியை அழைக்கும் முருகன், வர மறுத்த மூர்த்தி - இன்றைய எபிசோட்!
கதிர் கடை திறப்பு விழாவிற்கு மூர்த்தியை அழைக்கும் முருகன், வர மறுத்த மூர்த்தி - இன்றைய எபிசோட்!
கதிர் கடை திறப்பு விழாவிற்கு மூர்த்தியை அழைக்கும் முருகன், வர மறுத்த மூர்த்தி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தியை பார்க்க சென்ற முருகன், கதிர் மற்றும் முல்லையின் புது கடை திறப்பு விழாவிற்கு நீங்க போக வேண்டும் என மூர்த்தியிடம் சொல்கிறார். அதன் பின் கதிரிடம் மூர்த்தியை பார்த்த விஷயத்தை பற்றி முருகன் பேசுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் கடைக்கு சென்று பார்த்துவிட்டு முருகன் வீட்டிற்கு வருகிறார். பார்வதியிடம் முல்லை கடை பார்த்திருப்பது நல்ல இடம் நன்றாக வரும் என சொல்ல, அவங்க சீக்கரம் வேலை தொடங்க வேண்டும் என பம்பரமாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என சொல்ல, மல்லி தான் பணம் கொடுக்கிறேன் பெரிய கடை திறக்கலாம் என சொன்னாலே என பார்வதி சொல்ல, அவங்களுக்கு பிடித்த தொழில் செய்ய வேண்டும், இப்போ கூட இருவரும் பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். கணவர் ஒரு தொழில் தொடங்கும் போது முல்லை ஆதரவாக இருப்பதை பார்த்தால் மிகவும் சந்தோசமாக இருப்பதாக முருகன் சொல்கிறார்.

உடனே பார்வதி, என்னது முல்லை பெயிண்ட் அடிக்கிறாளா என கேட்க கட்டிய கணவன் சரியாக பார்த்துக் கொள்ளாமல் இருக்கிறான் என சொல்லுங்கள் படித்த பெண்ணை பெயிண்ட் அடிக்க விட்டிருக்கிறான் என பார்வதி கேட்க, மாப்பிள்ளைக்கு ஆதரவாக அவள் இருக்க வேண்டும் என நினைப்பது நல்ல விஷயம், சீக்கிரமாக பாரு அவங்க இருவரும் நல்ல நிலைமைக்கு வருவார்கள் என முருகன் சொல்ல அவங்க எப்படி வருகிறார்கள் என்பதை நான் பார்க்க தான போறேன் என பார்வதி சொல்கிறார். நீயும் பார்க்க தான் போகிறாய் வாழ்த்த தான் போகிறாய் என முருகன் சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

மறுபக்கம் மூர்த்தி வீட்டில் இருக்க, தனம், கண்ணன், ஜீவா அனைவரும் வருகிறார்கள். அப்போது ஐஸ்வர்யா கண்ணனிடம் ஏன் போனை எடுக்கவில்லை என கேட்க வேலை இருந்ததாக சொல்கிறார். பின் ஜீவாவிடம் போன விஷயம் என்ன ஆனது என கேட்க எல்லாம் விசாரித்து தான் பணம் கொடுத்தேன் போஸ்டிங் கொடுத்துவிடுவோம் என சொல்லிருக்காங்க என ஜீவா சொல்கிறார். திங்கள்கிழமையில் இருந்து வேலைக்கு வர சொல்லி இருப்பதாக தனம் சொல்கிறார். பின் ஜீவா இது தற்காலிகமான வேலை தான் இன்னும் 6 மாதத்தில் நிரந்தரம் ஆக்கிவிடுவார்கள் என ஜீவா சொல்ல மூர்த்தி ரொம்ப சந்தோசம் என சொல்கிறார். ஐஸ்வர்யா, இது நிரந்தரம் தான் குரூப் 1 தேர்வு எழுதி பெரிய ஆபிசர் ஆக வேண்டும் என ஐஸ்வர்யா சொல்ல, மீனா அதெல்லாம் சாதாரண விஷயமா? என கேட்கிறார்.

பின் முருகன், மூர்த்தியை பார்க்க வீட்டிற்கு வருகிறார். உடம்பு எப்படி இருக்கிறது என கேட்க நன்றாக இருப்பதாக சொல்கிறார். பின் மூர்த்தியிடம் கதிர் முல்லை ஹோட்டல் தொடங்க இருக்கிறார்கள். நீங்க எல்லாரும் அவங்களுடன் பேசாமல் இருந்துட்டீங்க நானும் அப்படி இருக்க முடியாது எல்லாரும் கை விட்டால் அவங்க என்ன செய்வார்கள் என கேட்க, அதான் ஹோட்டல் தொடங்க இருக்கிறார்கள், என முருகன் சொல்கிறார். தனம், எங்களுக்கும் அவங்க மீது கோவம் இல்லை என சொல்ல, மீனா அவங்க தான் வெளியே போனாங்க என சொல்கிறார்.

ஜீவா, மீனாவை அமைதியாக இருக்க சொல்ல, என்ன தான் பிரச்சனை என்றாலும் ஹோட்டல் தொடங்க நீங்க வர வேண்டும் என முருகன் சொல்கிறார். மூர்த்தி இருக்கட்டும் அவங்க ஹோட்டல் தொடங்கி நல்ல படியாக வரட்டும், அது எங்களுக்கு சந்தோசம் தான் ஆனால் நான் வீட்டை விட்டு போகாதீங்க என சொன்னேன் ஆனால் கேட்காமல் போனார்கள், மீண்டும் நான் அங்கே வந்தால் சரியாக வராது என மூர்த்தி சொல்கிறார். இதற்கு மேல் இதை பற்றி பேச வேண்டாம் என மூர்த்தி சொல்கிறார். பின் முருகன் கிளம்புகிறார்.

மறுபக்கம் மீனா, ஜீவாவிடம் கண்ணன் வேலை பற்றி கேட்கிறார். கண்ணன் வேலை நிரந்தரமாகி விடும் என சொல்ல, மீனா அரசு வேலைக்கு வயசு எவ்வளவு என கேட்கிறார். ஜீவா எதற்கு கேட்கிறாள் என தெரியாமல் இருக்கிறார். நீ தான் படித்து இருக்கிறாய் உனக்கு தெரியாதா என கேட்க, அப்போ நானும் அந்த எக்ஸாம் எழுத போகிறேன் என சொல்கிறார். உடனே ஜீவா சிரிக்க, கண்ணன் நல்ல வேலைக்கு போய்ட்டான், கதிர் முதலாளி ஆயிட்டான் என சொல்ல, நீ மட்டும் இப்படி இருக்கிறாய் என மீனா கேட்கிறார். பின் ஜீவா, நாமளும் முதலாளி தான என சொல்ல, அதெல்லாம் இல்லை என சொல்கிறார்.

எழில் உடன் ஹோட்டல் சென்று சாப்பிட்ட பாக்கியா, விவாகரத்து பற்றி வீட்டில் சொன்ன கோபி – இன்றைய எபிசோட்!

மறுபக்கம் முல்லை கடைக்கு தேவையான பொருள்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க கதிர் வந்து என்ன செய்கிறாய் என கேட்கிறார். எல்லாம் சரியாக இருக்கிறதா என பார்க்கிறேன் என சொல்ல, ஏற்கனவே நிறைய முறை பார்த்தாச்சு என கதிர் சொல்கிறார். முதல் நாளில் எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என  முல்லை சொல்ல, அப்போது முருகன் வந்து கதவை தட்டுகிறார். கதிர் கதவை திறக்க, முருகன் மூர்த்தியை பார்த்ததாக சொல்கிறார். எல்லாரையும் பார்த்தேன் என சொல்ல கதிர், அண்ணா என்ன சொன்னாங்க என கேட்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!