‘பாரதி கண்ணம்மா’ அருண், ஆல்யா மனசா இணையும் ரோஜா சீசன் 2 – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
சமீப காலமாக பல புதிய சீரியல்கள் சின்னத்திரை உலகில் தொடங்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது அதிக பிரபலமாக உள்ள ரோஜா சீரியலின் அடுத்த சீசன் குறித்த புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ரோஜா 2:
விஜய் டிவியில் ராஜா ராணி தொடரின் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆனவர் ஆல்யா மானசா. இவர் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் தான் ராஜா ராணி தொடருக்கான வாய்ப்பை பெற்றார். அதில் அவர் நடித்த கதாபாத்திரம் அதிக ரசிகர்களை பெற்று, ஆல்யா பெரும் புகழை அடைந்தார். இதேபோல், குறும்படங்களில் நடித்து வந்த நடிகர் அருண், பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சீரியல் வாய்ப்பை பெற்றார். இதில், இவரது பாரதி கதாபாத்திரம் மக்களை அதிகம் கவனிக்க வைத்தது.
“செம்பருத்தி” சீரியல் ஷபானா ஆர்யன் லைவில் கேட்ட குழந்தை சத்தம் – குழப்பத்தில் ரசிகர்கள்!
ஆல்யா மானசா மற்றும் அருண் இருவரும் சேர்ந்து தற்போது புதிய சீரியலில் நடிப்பதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதுவும் விஜய் டிவி பிரபலங்களான இவர்கள் இருவரும் புதிதாக சன் டிவியின் சீரியலில் சேர்ந்து நடிக்க உள்ளார்கள். தற்போது மிகவும் பிரபலமாக உள்ள ரோஜா சீரியலில் தான் இவர்கள் நடிக்க இருக்கிறார்கள். ரோஜா சீரியலில் அதன் இறுதி கட்டம் நெருங்கியுள்ள நிலையில், விரைவில் முடியவிருக்கிறது. இதனால் தான் ஆல்யா மானசா மற்றும் அருண் இருவரும் ‘ரோஜா 2’ சீரியலில் நடிக்கின்றனர்.
தனியாக பொங்கல் பண்டிகை கொண்டாடிய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா – ட்ரெண்டான வீடியோ!
ஆல்யாவின் கணவர் சஞ்சீவ் கூட தற்போது சன் டிவியில் கயல் என்ற தொடரில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ‘ரோஜா 2’ சீரியலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், இவர்களின் ஜோடியில் கதையின் கரு கூறப்பட்டுள்ளது. இவர்களின் ஜோடியில் வர உள்ள சீரியல் குறித்து ரசிகர்களிடம் அதிக ஆர்வம் எழுந்துள்ளது. இதனால் ப்ரோமோ வெளியான சிறிது நேரத்திலேயே அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.