தனியாக பொங்கல் பண்டிகை கொண்டாடிய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா – ட்ரெண்டான வீடியோ!

0
தனியாக பொங்கல் பண்டிகை கொண்டாடிய
தனியாக பொங்கல் பண்டிகை கொண்டாடிய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" ஐஸ்வர்யா - ட்ரெண்டான வீடியோ!
தனியாக பொங்கல் பண்டிகை கொண்டாடிய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா – ட்ரெண்டான வீடியோ!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் கண்ணனிற்கு ஜோடியாக நடித்து பின் விலகிய விஜே தீபிகா தற்போது தனது ரூமில் பொங்கல் கொண்டாடியது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

விஜே தீபிகா:

பாண்டியன் ஸ்டோர்ஸ் டாப் சீரியல் வரிசையில் இருப்பதால் இதில் நடிக்கும் சிறு கதாபாத்திரமாக இருந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. அந்த வகையில் கண்ணனிற்கு ஜோடியாக காதல் காட்சிகளில் நடித்து பின் திருமணம் வரை சென்று சீரியலில் மாபெரும் திருப்பத்தை கொண்டு வந்த ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் விஜே தீபிகா நடித்து வந்தார். அவர் சீரியலில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியதால் மக்கள் மத்தியில் கண்ணன், ஐஸ்வர்யா ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர்.

அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – கொரோனா தடுப்பூசி கட்டாயம்! மாநில அரசு முக்கிய உத்தரவு!

ஆனால் அவருக்கு முகத்தில் அதிகமான முகப்பரு வந்ததால் சேனல் தரப்பில் இருந்து அவருக்கு சில கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட காலத்தில் அந்த பிரச்சனை சரி ஆகாமல் இருந்ததால் சீரியலில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக சாய் காயத்ரி நடித்து வருகிறார். இந்நிலையில் விஜே தீபிகா சீரியலில் இருந்து விலகினாலும் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்த சரவண விக்ரம் உடன் நட்பாக பழகி வருகிறார். இந்த ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கும் நிலையில் இருவரும் சேர்ந்து யூடுப் சேனல் மூலமாக ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.

மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – தொழிலாளர் அமைச்சகத்தின் முக்கிய அறிவிப்பு!

அந்த வகையில் தற்போது விஜே தீபிகா பொங்கலுக்கு தனது கிராமத்திற்கு போகாமல் முதன்முறையாக தனது ரூமில் தனியாக பொங்கல் பண்டிகை கொண்டாடி இருக்கிறார். அது குறித்த வீடியோ ஒன்றை அவர் பதிவிட்ட நிலையில் அதில் வீட்டை சுத்தம் செய்வது குறித்தும், பொங்கல் வைப்பது பற்றியும், சாமி கும்பிட தேவையான பொருள்கள் வாங்க செல்வது வரை அனைத்தையும் வீடியோவில் காட்டி இருக்கிறார். ஆனால் இந்த வீடியோவில் கண்ணனை மிஸ் செய்வதாக பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!