TNPSC Group 2, 2A தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – ரிசல்ட் எப்போது? சரிபார்ப்பது எப்படி?

0
TNPSC Group 2, 2A தேர்வு எழுதியோர் கவனத்திற்கு - ரிசல்ட் எப்போது? சரிபார்ப்பது எப்படி?
TNPSC Group 2, 2A தேர்வு எழுதியோர் கவனத்திற்கு - ரிசல்ட் எப்போது? சரிபார்ப்பது எப்படி?
TNPSC Group 2, 2A தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – ரிசல்ட் எப்போது? சரிபார்ப்பது எப்படி?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவித்தபடி குரூப் 2,2ஏ தேர்வு கடந்த மே 21ம் தேதி அன்று நடந்து முடிந்துள்ளது. இத்தேர்வை சுமார் 11 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதியுள்ளனர். இத்தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்றும் எப்படி இணையதளத்தில் பார்ப்பது என்றும் பார்ப்போம்.

தேர்வர்கள் கவனத்திற்கு:

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. அதன்படி குரூப் 2,2ஏ தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இத்தேர்வு மூலமாக குரூப் 2 பதவியில் 116 பணியிடங்களும் மற்றும் குரூப் 2, 2ஏ பதவியில் 5413 பணியிடங்களும் என மொத்தமாக 5529 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் சுமார் 13 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தனர். இத்தேர்வு கடந்த மே 21ம் தேதி அன்று திட்டமிட்டபடி நடைபெற்றது. அத்துடன் இத்தேர்வை 11 லட்சம் பேர் மட்டுமே எழுதியதாக தெரிவிக்கப்பட்டது.

கோடை காலத்தில் சுற்றுலா செல்ல திட்டமிடுபவரா நீங்கள்? அப்போ தவறாமல் படிங்க!

இந்த நிலையில் இத்தேர்வுக்கான Answer Key வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து இத்தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். இத்தேர்வுக்கான முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண்கள் எவ்வளவு நிர்ணயிக்கப்படும் என்ற அறிவிப்புக்கும் தேர்வர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். மேலும் குரூப் 2,2ஏ தேர்வுக்கான முதன்மை தேர்வு வருகிற செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இத்தேர்வுக்கான கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு டிசம்பர் முதல் ஜனவரி மாதங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை சரி பார்ப்பதற்கான வழிமுறைகள்:

1. முதலில் TNPSCயின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. அதன் பின்னர், முகப்பு பக்கத்தில் வலது புறத்தில் உள்ள “WHATS NEW” என்பதில் TNPSC குரூப் 2 தேர்வு முடிவுக்கான விளம்பரத்தை கிளிக் செய்ய வேண்டும். இதையடுத்து ஒரு புதிய பக்கம் திரையில் தோன்றும்.

Exams Daily Mobile App Download

3. அடுத்ததாக விண்ணப்பதாரர்கள் தேர்வு முடிவுகளுக்கான இணைப்பை கிளிக் செய்து, பின்னர் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை கொடுக்க வேண்டும்.

4. இறுதியாக “submit” என்ற பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.

5. இப்போது ஒரு புதிய பக்கத்தில் pdf கோப்பு வடிவத்தில் தேர்வு முடிவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் உங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை வைத்து தேர்வு முடிவுகளை சரி பார்க்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!