கோடை காலத்தில் சுற்றுலா செல்ல திட்டமிடுபவரா நீங்கள்? அப்போ தவறாமல் படிங்க!

0
கோடை காலத்தில் சுற்றுலா செல்ல திட்டமிடுபவரா நீங்கள்? அப்போ தவறாமல் படிங்க!
கோடை காலத்தில் சுற்றுலா செல்ல திட்டமிடுபவரா நீங்கள்? அப்போ தவறாமல் படிங்க!
கோடை காலத்தில் சுற்றுலா செல்ல திட்டமிடுபவரா நீங்கள்? அப்போ தவறாமல் படிங்க!

கோடை காலம் வந்துவிட்டாலே குழந்தைகள், பெற்றோர்கள் என அனைவருமே எங்கு சுற்றுலா செல்லலாம் என்று தான் பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர். தற்போது கோடை காலமாக இருப்பதால் எந்தெந்த பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்த்து விடவேண்டும் என்பது குறித்தான முழு அறிவிப்பும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா:

கோடை விடுமுறை என்றதுமே குழந்தைகளுடன் பெற்றோர்கள் எங்காவது தூரமான பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். அதாவது கோடைகாலம் என்பதால் ஏதாவது மலை பிரதேசங்கள் மற்றும் குளிர்ச்சியான பகுதிகளுக்கு சுற்றுலா சென்று அந்த பகுதியை சுற்றி பார்க்க வேண்டும் என விரும்புகின்றனர். கோடை காலத்தில் சுற்றுலா செல்ல நினைத்தால் கீழ் சொல்லப்பட்டுள்ள பகுதிகளுக்கு மட்டும் செல்லவே கூடாது. இதில் முதலாவதாக சென்னை தான் இருக்கிறது. குடும்பத்துடன் சென்னைக்கு சுற்றுலா செல்ல நினைத்தால் கண்டிப்பாக அதை கோடை காலத்தில் தவிர்த்து விடுங்கள்.

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

சென்னையை சுற்றி பார்க்க பல இடங்கள், அழகான கடற்கரைகள் இருந்தாலும் கூட வெயில் காலத்தில் கோடை வெயிலை சமாளிப்பது முடியாது. கோடை காலத்தில் மட்டும் சென்னைக்கு சுற்றுலா சென்று விட்டால் போதும் போதும் என்றாகிவிடும். அந்த அளவுக்கு சென்னையில் வெயில் கொளுத்தி கொண்டிருக்கிறது. இதனையடுத்து இந்தியாவின் கோல்டன் சிட்டி என்று அழைக்கப்படும் ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் பகுதிக்கும் கோடைகாலத்தில் சுற்றுலா செல்லக் கூடாது. கோடை காலத்தில் ஜெய்சால்மர் பகுதிகளில் வெப்பநிலை 42 டிகிரி வரைக்கும் இருக்கும். இதனால் சுற்றுலா செல்ல நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த பகுதிகளை தவிர்த்து விட வேண்டும்.

Exams Daily Mobile App Download

அடுத்ததாக சுற்றுலா என்றாலே நினைவிற்கு வருவது போல கோவா தான். வெயில் காலத்தில் கோவாவின் பக்கம் எட்டிக் கூட பார்த்து விடக்கூடாது. கோவாவில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க சில நாட்கள் தேவைப்படும். இதனால் கோடை காலத்தில் கண்டிப்பாக கோவாவிற்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும். குஜராத் மாநிலத்திலும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரைக்கும் கோடைகாலத்தில் சுற்றுலா செல்வதை முற்றிலுமாகத் தவிர்த்து விடவேண்டும். அடுத்ததாக இந்தியா மற்றும் உலகெங்கிலும் சுற்றுலா பயணிகள் கோடை காலத்தில்தான் ஆக்ராவிற்கு வருகை தருகிறார்கள். கோடைகாலத்தில் ஆக்ராவில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரைக்கும் இருப்பதால் இங்கும் சுற்றுலா செல்வதை முடிந்த வரைக்கும் தவிர்த்துவிட வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here