டிகிரி முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
டிகிரி முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு!
டிகிரி முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு!

டிகிரி முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவில் உள்ள ரிசர்வ் வங்கியில் 294 அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளது. அதற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளனர். மேலும் அதற்கு தகுதியானவர்கள் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்து உள்ளனர்.

வங்கியில் வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக படித்து முடித்த பட்டதாரி இளைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்ற வரும் இறுதியில் தமிழகத்தில் போடப்பட்டு இருந்த ஊரடங்கில் இருந்து பல தளர்வுகள் அறிவித்தனர். தற்போது தான் தமிழகம் முன்பு இருந்த இயல்பு நிலைக்கு வந்துள்ளது. மேலும் அரசின் தரப்பில் இருந்து பல வேலைவாய்ப்புகளும் அறிவிக்கப் பட்டு வருகின்றனர். மேலும் இந்த வருட துவக்கத்தில் tnpsc குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டது.

முதன்முறையாக தனது மகனின் வீடியோவை வெளியிட்ட ஆலியா, சஞ்சீவ் – ரசிகர்கள் வாழ்த்து!

இந்நிலையில் நாட்டின் மத்திய வங்கியான ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா கிரேடு ‘பி’ அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 294 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பணியிடத்துக்கு மேலும் சில விவரங்களை கீழே வரும் தொகுப்பில் பார்ப்போம்.

காலியிடங்களின் விவரங்களாக, Officers in Grade ‘B’(DR)- General பதவிக்கு 238 இடங்களும், Officers in Grade ‘B’(DR)- DEPR பதவிகளுக்கு 31 இடங்களும், Officers in Grade ‘B’(DR)- DSIM பதிவுகளுக்கு 25 இடங்களும் உள்ளது. வயது வரம்பாக விண்ணப்பதாரர் 01.01.2022 அன்று 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு. கல்வித்தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Post Office சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள்!

DEPR மற்றும் DSIM பிரிவுகளுக்கு கணிதம், பொருளாதாரம், புள்ளியியல் போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூபாய் 1,08,404 வரை வாங்கலாம் என்றும், இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.850 ஆகவும், SC/ST, PWD பிரிவுகளுக்கு ரூ.100 ஆகவும் உள்ளது. மேலும், இதற்கு விண்ணப்பிக்கும் முறையாக இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.rbi.org.in அல்லது https://ibpsonline.ibps.in/rbiofeb22/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதியாக வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி வரை இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!