முதன்முறையாக தனது மகனின் வீடியோவை வெளியிட்ட ஆலியா, சஞ்சீவ் – ரசிகர்கள் வாழ்த்து!

0
முதன்முறையாக தனது மகனின் வீடியோவை வெளியிட்ட ஆலியா, சஞ்சீவ் - ரசிகர்கள் வாழ்த்து!
முதன்முறையாக தனது மகனின் வீடியோவை வெளியிட்ட ஆலியா, சஞ்சீவ் - ரசிகர்கள் வாழ்த்து!
முதன்முறையாக தனது மகனின் வீடியோவை வெளியிட்ட ஆலியா, சஞ்சீவ் – ரசிகர்கள் வாழ்த்து!

தமிழ் சின்னத்திரையில் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் நடிகை ஆலியா மானசா மற்றும் நடிகர் சஞ்சீவ் தனது மகன் அர்ஷின் முதல் வீடியோவை ரசிகர்களுக்கு வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஆலியா மானசா சஞ்சீவ் ஜோடி:

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் ஆல்யா மானசா. அவர் சில ஆண்டுகளுக்கு முன் அவருடன் இணைந்து நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அய்லா என்ற மகளும் இருக்கிறார். அம்மா அப்பாவை போல அய்லாவும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி இருக்கிறார். அவருடைய அழகான செய்கைகளை பார்க்க ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். சில வாரங்களுக்கு முன் அவர் இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகினார்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் கதிர் யார் தெரியுமா? இணையத்தில் லீக்கான தகவல்கள்!

தன்னுடைய 9 மாத காலம் வரை அவர் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்த நிலையில் மிகவும் கஷ்டப்படுவதால் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக தற்போது ரியா விஸ்வநாதன் என்பவர் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆலியாவிற்கு சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அவனிற்கு அர்ஷ் என பெயர் வைத்துள்ளனர். பிறந்த அன்றே சஞ்சீவ் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்தார்.

இந்நிலையில் இந்த அழகான ஜோடிக்கு பிறந்த குழந்தையின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது, ஏற்கனவே அவரது அக்கா ஐலா பிறந்த அன்று முதல் இந்த நாள் வரை இணையத்தை கலக்கி வரும் நிலையில் தற்போது அர்ஷ் அவருடன் இணைந்து இருக்கிறார். அந்த அழகான ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர். மேலும் சின்னத்திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!