தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு – மதிப்பெண்களை தெரிந்து கொள்வது எப்படி?

0
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு - மதிப்பெண்களை தெரிந்து கொள்வது எப்படி?
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு - மதிப்பெண்களை தெரிந்து கொள்வது எப்படி?
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு – மதிப்பெண்களை தெரிந்து கொள்வது எப்படி?

தமிழகம், புதுச்சேரியில் இன்று காலை 10 மணி அளவில் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் குறித்த முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முடிவு வெளியீடு:

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக நடத்த முடியாமல் போன பொதுத்தேர்வுகள், 2021-22ஆம் ஆண்டில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நடத்தப்பட்டன. இருப்பினும் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டன. அதே வேளையில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டன. மேலும் கடந்த ஜூன் 20ஆம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வு கடந்த மே 10 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை 8.3 லட்சம் மாணவா்கள் எழுதினா்.

Exams Daily Mobile App Download

இதன் விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, தோ்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தமிழகம், புதுச்சேரியில் 90.07% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. பொதுத்தேர்வு எழுதிய மாணவிகளில் 94.99% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் 84.86% பேர் தேர்ச்சி பெற்றதாகவும் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 1 தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 10.13% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2020 மார்ச் பொதுத்தேர்வில் தேர்ச்சி 96.04%ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு 5.97% குறைந்தது.

தமிழகத்தில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் – அரசு முக்கிய அறிவிப்பு! கொரோனா பரவல் எதிரொலி!

மாணவர்கள் தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in/, https://dge.tn.nic.in/, https://dge1.tn.nic.in/,https://dge2.tn.nic.in/ ஆகிய இணைய தளங்களில் காணலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். முந்தைய ஆண்டுகளைப் போல மாணவா்களின் கைப்பேசி எண்ணுக்கும் sms வழியாக தோ்வு முடிவுகள் அனுப்பப்படும் எனவும் தோ்வுத் துறை தெரிவித்துள்ளது

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!