வங்கி காசோலை பரிவர்த்தனையில் புதிய Positive Pay System – RBI முக்கிய அறிவிப்பு!

0
வங்கி காசோலை பரிவர்த்தனையில் புதிய Positive Pay System - RBI முக்கிய அறிவிப்பு!
வங்கி காசோலை பரிவர்த்தனையில் புதிய Positive Pay System - RBI முக்கிய அறிவிப்பு!
வங்கி காசோலை பரிவர்த்தனையில் புதிய Positive Pay System – RBI முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் செயல்பட்டு வரும் அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் காசோலை பரிவர்த்தனையின் போது, புதிய நேர்மறை ஊதிய முறையை (Positive Pay System) கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என RBI அறிவுறுத்தியுள்ளது.

காசோலை பரிவர்த்தனை

நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் வங்கி மோசடிகளை தவிர்க்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் காசோலைக்கான நேர்மறை ஊதிய முறையை (Positive Pay System) அறிமுகப்படுத்தியது. இது மோசடி நடவடிக்கையை கண்டறிய வடிவமைக்கப்பட்ட ஒரு கருவியாகும். இது வங்கி வாடிக்கையாளர்கள் வழங்கிய காசோலை தொடர்பான தகவலை அழிப்பதற்காக செயல்படுகிறது. இந்த புதிய விதியின் படி, காசோலைகளை வழங்கும் வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கிகளின் கிளை அல்லது மொபைல் பேங்கிங் சேவைகள் மூலம் காசோலை விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

தமிழக கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் கவனத்திற்கு – உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தல்!

ஒருவேளை காசோலை வழங்குவதற்கு முன்பு, இது தொடர்பான தகவல்களை வங்கிக்கு தெரிவிக்கவில்லை என்றால் அந்த காசோலைகள் பவுன்ஸ் ஆகி விடும். அதற்காக சில வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு SMS, ATM அல்லது மின்னஞ்சல் மூலம் காசோலை பற்றி தெரிவிக்கும் வசதியை வழங்குகின்றன. வங்கிகள் சரிபார்க்க வேண்டிய தகவல்களில் காசோலை எண், செக் தேதி, பணம் பெறுபவரின் பெயர், கணக்கு எண், தொகை போன்ற முக்கிய விவரங்கள் அடங்கும்.

நாட்டின் சில முக்கிய வங்கி நிறுவனங்கள் இந்த விதிமுறையை ஏற்றுக்கொண்டு, அதனை காசோலை சரிபார்ப்பு செயல்முறையின் ஒரு கட்டாய பகுதியாக ஆக்கியுள்ளது. ஏனென்றால் மோசடி நடவடிக்கையில் இருந்து வாடிக்கையாளர்களை பாதுகாப்பதற்காக, ஜனவரி 1 முதல் இந்த சரிபார்ப்பு முறையை அமல்படுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. அதாவது வங்கி கணக்கு வைத்திருப்பவரின் விருப்பப்படி, ரூ.50,000 மற்றும் அதற்கு மேல் உள்ள காசோலைகளை சரிபார்ப்பது குறித்து RBI, கடந்த ஆண்டே அனைத்து வங்கிகளுக்கும் அறிவிப்பை வெளியிட்டது.

TN Job “FB  Group” Join Now

இருப்பினும், இந்த நடவடிக்கைகள் ரூ .5 லட்சத்துக்கு மேல் உள்ள காசோலைகளுக்கு கட்டாயமாக்குவதை சம்பந்தப்பட்ட வங்கிகள் பரிசீலிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஆக்சிஸ் வங்கி, SBI, கோடக் மஹிந்திரா வங்கி, ICICI வங்கி, பேங்க் ஆப் பரோடா மற்றும் HDFC வங்கி போன்ற நாட்டின் பல முன்னணி வங்கிகள் இந்த புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளன. இருப்பினும், அதிக மதிப்புள்ள காசோலைகளுக்கு முன்கூட்டியே பதிவு செய்யப்படாவிட்டால், அது பவுன்ஸ் ஆக வாய்ப்புகள் இருப்பதாக RBI அறிவித்துள்ளதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!