பகுதி நேர பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் – ஆகஸ்ட் 22 ல் வெளியீடு!

0
பகுதி நேர பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் - ஆகஸ்ட் 22 ல் வெளியீடு!
பகுதி நேர பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் - ஆகஸ்ட் 22 ல் வெளியீடு!
பகுதி நேர பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் – ஆகஸ்ட் 22 ல் வெளியீடு!

தமிழகத்தின் சில முன்னணி கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., பி.டெக்., படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதற்கான தரவரிசை பட்டியல் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

தரவரிசை பட்டியல்:

தமிழகத்தில் முழு நேர கல்லூரி செல்லும் மாணவர்களை போன்று சிலர் பகுதி நேரத்தில் படித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் சார்பில் கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி, சேலம், பர்கூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரிகள், காரைக்குடி அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி, கோவையில் உள்ள கோவை தொழில்நுட்ப கல்லூரி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி போன்றவற்றில் பகுதிநேர பி.இ., பி.டெக்., பட்டப்படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

இது போன்ற கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக கடந்த 6ம் தேதி முதல் சமர்ப்பிக்கப்பட்டு வந்தது. விண்ணப்பிப்பதற்கான தகுதிகளாக டிப்ளமோ படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் முழுமை பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிகிறவராகவோ அல்லது இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தவராகவோ இருக்க வேண்டும் என்பதும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதனை தொடந்து விண்ணப்பிக்கும் மாணவர்கள் கட்டணத்தை இணையம் மூலமாக செலுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது.

CBSE தனித்தேர்வர்களின் கவனத்திற்கு – அட்மிட் கார்டு வெளியீடு!

மேலும் பகுதி நேர பி.இ., பி.டெக் முதலாமாண்டு படிப்பிற்கு இதுவரை 800-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் மூலம் விண்ணப்ப படிவங்களை பதிவு செய்யலாம். இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இணைய வழியில் நடைபெற உள்ளது. மாணவர் சேர்க்கை, விண்ணப்ப கட்டணம், முக்கிய தேதிகள் உள்ளிட்ட விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மெஸ்ஸி கண்ணீரை துடைத்து போட்ட TISSUE பேப்பர் – 7.43 கோடி ரூபாய்க்கு ஏலம்!

தரவரிசை பட்டியல் செப்டம்பர் 22-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். தகுதியான மாணவர்கள் வரும் 22 முதல் 25-ந் தேதி வரை கலந்தாய்வுக்கான சிறப்பு கட்டணத்தை செலுத்தலாம். சிறப்பு பிரிவினருக்கு வரும் செப்டம்பர் 26-ந் தேதியும், பொதுப்பிரிவினருக்கு 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும். செப்டம்பர் 30-ந் தேதி சேர்க்கைக்கான கடிதம் வழங்கப்படும். மாணவர் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு 94869 77757, 0422-2574071, 2574072 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!