தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை கொட்டித் தீர்க்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை கொட்டித் தீர்க்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில்‌ கடற்கரையை ஒட்டி நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, சேலம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, நாமக்கல்‌, கரூர்‌, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல்‌ விருதுநகர்‌ ராமநாதபுரம்‌, தூத்துக்குடி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்‌, கடலூர்‌, பெரம்பலூர்‌, அரியலூர்‌, திருவாரூர்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழையும்‌ பெய்யக்கூடும்‌.

CBSE தனித்தேர்வர்களின் கவனத்திற்கு – அட்மிட் கார்டு வெளியீடு!

22.08.2021: தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, கடலூர்‌, சென்னை, காஞ்சிபுரம்‌, வேலூர்‌, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை, சேலம்‌, தர்மபுரி, திருவண்ணாமலை, தென்காசி, திண்டுக்கல்‌, மதுரை, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌ பெய்யக்கூடும்‌.

23.08.2021: தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவள்ளூர்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, கரூர்‌, ஈரோடு மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌ பெய்யக்கூடும்‌.

ஆகஸ்ட் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – இலங்கை அதிபர் அறிவிப்பு!

24.08.2021: தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, வட தமிழகத்தின்‌ ஒரு சல மாவட்டங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌ பெய்யக்கூடும்‌.

25.08.2021: தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேக மூட்டத்துடன்‌
காணப்படும்‌, நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌. அவ்வப்போது கன மழையும்‌ இருக்கக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்‌.

சென்னை மெட்ரோ நிலையங்களில் கடைகள் – தனியாருக்கு அழைப்பு!

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

21.08.2021 முதல்‌ 25.08.2021 வரை: தென்‌ மேற்கு மற்றும்‌ மத்திய மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடை இடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!