மெஸ்ஸி கண்ணீரை துடைத்து போட்ட TISSUE பேப்பர் – 7.43 கோடி ரூபாய்க்கு ஏலம்!

0
மெஸ்ஸி கண்ணீரை துடைத்து போட்ட TISSUE பேப்பர் - 7.43 கோடி ரூபாய்க்கு ஏலம்!
மெஸ்ஸி கண்ணீரை துடைத்து போட்ட TISSUE பேப்பர் - 7.43 கோடி ரூபாய்க்கு ஏலம்!
மெஸ்ஸி கண்ணீரை துடைத்து போட்ட TISSUE பேப்பர் – 7.43 கோடி ரூபாய்க்கு ஏலம்!

சமீபத்தில் பார்சிலோனா அணியில் இருந்து விடைபெற்ற மெஸ்ஸி, அதற்கான நிகழ்வின் போது கண்ணீர் விட்டு உணர்ச்சி பூர்வமாக பேசி இருந்தார். அப்போது கண்ணீரை துடைக்க அவர் பயன்படுத்திய டிஸ்ஸு பேப்பர் தற்போது 7.43 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டிஸ்ஸு பேப்பர்

பொதுவாக உலக பிரபலங்கள், முக்கிய எழுத்தாளர்கள், அறிவியல் ஆய்வாளர்கள், சினிமா நட்சத்திரங்கள் விளையாட்டு வீரர்கள் என பலரும் பயன்படுத்திய அரிய வகை பொருட்கள் எல்லாம் ஒரு காலத்துக்கு பின்னர் ஏலத்துக்கு விடப்படுவது உண்டு. அந்த பொருட்களுக்கு எத்தனை கோடி மதிப்புகளாக இருந்தாலும் அதனை வாங்குவதற்கு ஒரு கூட்டம் மக்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இதற்கிடையில் அர்ஜென்டினாவை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி பயன்படுத்திய டிஸ்ஸு பேப்பர் ஒன்று இந்திய மதிப்பில் ரூ.7,43,01,700 க்கு ஏலத்துக்கு விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

T20 உலக கோப்பை தொடர் 2020: இந்திய அணி உத்தேச பட்டியல் – இளம் வீரர்களுக்கு வாய்ப்பு?

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக பார்சிலோனா அணிக்காக விளையாடி பல பெருமைகளை பெற்றுத் தந்த கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி அந்த அணியுடன் ஏற்பட்ட சில வேறுபாடு காரணமாக சமீபத்தில் விலகினார். இதையடுத்து பாரிஸை சேர்ந்த PSG அணியுடன் கைகோர்த்துள்ள அவர் கால்பந்து உலகில் இன்னும் பல வெற்றிகளை காண்பார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனிடையே பார்சிலோனா அணியில் இருந்து விலகுவதை உறுதி செய்வதற்காக ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட மெஸ்ஸி, தனது 21 ஆண்டுகால பார்சிலோனா அணியுடனான பந்தத்தை நினைத்து கண் கலங்கினார்.

சென்னை மெட்ரோ நிலையங்களில் கடைகள் – தனியாருக்கு அழைப்பு!

அப்போது அவருக்கு அருகில் இருந்த ஒரு டிஸ்ஸு பேப்பரை கொண்டு தனது கண்களை துடைத்திருந்தார் அவர். இந்த டிஸ்ஸு பேப்பர் தற்போது ஒரு மில்லியன் டாலருக்கு அதாவது இந்திய மதிப்பில் ரூ.7,43,01,700 க்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படாத பட்சத்தில் அந்த டிஸ்ஸு பேப்பரில் இருக்கும் மெஸ்ஸியின் DNA சாம்பிளை கொண்டு மெஸ்ஸி போன்ற இன்னொரு உலகத்தரம் வாய்ந்த வீரரை உருவாக்க முடியும் என கூறப்பட்டு வருகிறது. மறுபக்கத்தில் அது மெஸ்ஸி பயன்படுத்திய டிஸ்ஸு தானா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!